English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Careerist
n. தம் முன்னேற்ற நாட்டமுடையவர்.
Careful
a. அக்கறை கொண்ட, கவலையுள்ள, பொறுப்பில் வைத்திருக்கிற, வருந்தி உழைக்கிற, விழிப்புடைய, கவனமுள்ள, எச்சரிக்கையாயிருக்கிற, அக்கறையுடன் செய்யப்பட்ட, அக்கறை காட்டுகிற.
Carefully
adv. ஊன்றிய கவனத்துடன், விழிப்போடு, உன்னிப்பாக.
Careladen
a. கவலைகள் நிரம்பிய.
Careless, a..
கவனமில்லாத, அக்கறை கொள்ளாத, கவலையற்ற, கருத்து ஊன்றாத, அசட்டையாயிருக்கிற, சிந்தனையற்ற, தவறான, சரியாயிராத.
Carelessness
n. உன்னிப்பாயிராமை, கவனமின்மை.
Caress
n. தைவரல், வருடுதல், அன்பாகத்தடவிக் கொடுத்தல், முத்தம் கொடுத்தல், புகழ்தல், (வி.) அன்பாகத்தடவிக் கொடு, வருடு, கொஞ்சு, சீராட்டு, புகழைச்சொல், பாராட்டு.
Caressing
n. சீராட்டுதல், (பெ.) அன்பாய்த் தட்டிக்கொடுக்கிற.
Caret
n. இடையெச்சக்குறி, விடுபட்டுப் போனதைச் சேர்க்குமாறு சுட்டிக்காட்டும் குறி.
Caretaker
n. காவற்பணிப் பொறுப்பாளர், கம்டிட மேற்பார்வைப் பொறுப்பாளர், (பெ.) இடையீட்டுக்காலக் கணடகாணிப்பு மேற்கொண்ட.
Care-worn
a. கவலைகளினால் அலுத்துப்போன, நச்சரிக்கப்பட்ட.
Carex
n. கோரைப்புல் வகையின் இனம்.
Carfax, carfox
சதுக்கம், நாற்சந்தி.
Cargo
n. கப்பல் சரக்கு, கப்பற்பாரம்.
Cargoose
n. குறுஞ்சிறகுள்ள சூட்டுடை நீர்ப்பறவை,
Carib
n. மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர், மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி, (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Caribou
n. வட அமெரிக்கக் கலைமான் வகை.
Carica
n. பப்பாளி மர இனம்.
Caricature
n. பகடிப்படம், கேலிச்சித்திரம், ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை, நையாண்டி வருணனை, (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு, நகைப்புக்கிடமாகிப் படம் வரை, கேலிக்கூத்தாக்கிப் பழி.