English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cardinal-flower
n. செந்நிற மலர்களையுடைய அமெரிக்கச் செடி வகை.
Cardinally
adv. அடிப்படையாக, மூலமுதல் தொடர்புடையதாக, முக்கியமாக.
Card-index
n. தாள் நறுக்கு முதனினைப்பு, (வி.) தாள் நறுக்கு முதனினைப்பு அமை.
Carding-machine
n. சணல்-கம்பளி முதலியவற்றில் சிக்கு எடுக்கும் பொறி.
Cardiogram
n. நெஞ்சுத்துடிப்பளங்க்குங் கருவி பதிவு செய்த நௌதவரை.
Cardiograph
n. நெஞ்சுத்துடிப்பைப் பதிவு செய்யும் கருவி.
Cardioid
n. நெஞ்சுப்பை வடிவான வளைவு, (பெ.) நெஞ்சுப்பை வடிவான.
Carditis
n. நெஞ்சுப்பை அழற்சி.
Cardoon
n. முள்ளி போன்ற தின்னத்தக்க கிழங்குகளையுடைய தோட்டக் காய்கறிச் செடிவகை.
Cardophagus
n. முட்செடித்தின்னி, கழுதை.
Card-rack
n. பேட்டிச்சீட்டு வைப்பறை.
Cardsharper
n. சீட்டாத்தத்தில் ஏமாற்றுபவர்.
Card-table
n. சீட்டாட்ட மேசை.
Card-thistle
n. முள்மலர்ச் செடிவகை, ஆடைக் கம்பளியின் மயிர்நீவு கருவி.
Card-vote
n. எண்ணுரிமை மொழிச்சீட்டு, ஒருவர் எத்தனைப் பேருக்குப் பிரதிநிதியாய் இருக்கிறாரோ அத்தனை எண்ணிக்கைக்குத் தக்கபடி அவர் வாக்கு மதிப்புப் பெறும் வாக்களிப்பு முறை.
Care
n. அக்கறை, கவலை, கவலைக்குரிய செய்தி, கவனம், நினைப்பு, முன்கருதல், விழிப்பு, எச்சரிக்கை, துன்பம், வருத்தம், பொறுப்பு, காப்பு, ஆதரவு, செய்தற்குரிய பணி, கவனிக்க வேண்டிய செயல், மேற்பார்வை,(வினை) கவலைப்படு, நாட்டங்கொள், அக்கறைகொள், பொருட்படுத்து, மதிப்புக்கொடு, பொருட்டாக மதி, அன்புகாட்டு, விருப்பம்கொள், கவனித்தப்பேணு, கவனித்துக்கொள், உணவு கொடுத்தாதரி, மேற்பார்வையிடு.
Careen
n. (கப்.) சாய்த்து நிறுத்தப்படும் நிலை, (வி.) செப்பனீட்டுத்துறையில் ஒருபக்கமாய்ச் சாய்ந்து நிற்கச் செய், சாய்ந்திரு.
Careenage
n. கப்பல்கள் ஒருபக்கமாகச் சாய்த்து வைத்துச் செப்பனிடப்படுகிற இடம், சாய்த்த நிலை, செப்பனிடும் செலவு.
Career
n. விரை செலவு, பாய்வு, வாழ்க்கைப் போக்கு, வாழ்வின் வளர்ச்சி, வாழ்க்கைப்பணி முன்னேற்றம், பிழைக்கும் வழி, (வி.) பாய்ந்தோடு, விரைந்து செல்.