English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carbonate
n. (வேதி.) கரியகை, கரியக்காரியின் உப்பு, (வி.) கரியகை ஆக்கு, கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவி, காற்றுட்டு.
Carbonic
a. (வேதி.) கரியஞ்சார்ந்த.
Carboniferous
-1 a. கரியம் உண்டாக்குகிற, நிலக்கரி உண்டு பண்ணுகிற, நிலக்கரி விளைவுக்குரிய, நிலக்கரியை உட்கொண்ட.
Carboniferous
-2 a. (மண்.) நிலக்கரிப்படிமத் தளங்களுருவான தொல்லுயிரூழிப் பகுதிக்குரிய, நிலக்கரி ஆக்கப்பாறை ஊழிக்குரிய.
Carbonization
n. கரியாக்கம், கரியமாக மாறுபடுதல்.
Carbonize
v. கரியாக்கு, நிலக்கரியாக்கு, சுட்ட நிலக்கரியாக்கு, படி எடுப்பதற்காகக் கரிபூசு.
Carbon-paper
n. படிவுத்தாள், படியெடுக்க உதவுந்தாள்.
Carborundum
n. தோகைக்கல், கரிக்கன்மகை.
Carboy
n. மூங்கிற்கூடை அணைப்புடைய பெரிய உருண்டைக் கண்ணாடிப்புட்டி.
Carbuncle
n. மாணிக்கக்கல், அரசபிளவை, நச்சுப்பரு, நச்சுச் சீக்கட்டு, முகப்பரு.
Carbuncled
a. மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற, அரச பிளவையால் பீடிக்கப்பட்ட, சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய.
Carbuncular
a. மாணிக்கக்கல்லுக்குரிய, மாணிக்கக்கல் போன்ற, சிவந்த, வீங்கிய.
Carburate, carburet
வேதியியல் முறையில் கரியத்துடன் இணை, கரியச் சேர்மானம் செறிவி.
Carburetted
a. கரியத்துடன் இணைக்கப்பெற்ற, கரியச் சேர்மம் செறிவிக்கப்பெற்ற.
Carburetter, carburettor
n. உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்க செய்யும் அமைவு.
Carcajou
n. பெருந்தீனி கொள்ளும் பெரிய கீரியின விலங்கு வகை.
Carcanet
n. கல்லட்டிகை போன்ற கழுத்தணிகலன்.
Carcase, carcass
விலங்கின் பிணம், இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு, தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம், வமதிப்பு வழக்கில் நடைப்பிணம், பயனற்ற கழிவுப்பொருள், வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம், திட்டக் குறிப்பு, பாழ், அழிபாடு, (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Carcinogen
n. புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருள்.
Carcinology
n. மேல்தோட்டு உயிரினங்களைப் பற்றிய ஆய்வு நுல்.