English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Captainship
n. மீகான் பதவி, தளபதி நிலை, தலைமைத்திறம், இயக்குந் திறலாண்மை, தலைமை.
Captation
n. உணர்ச்சிமூலம் கவரவல்ல வாதம், கவர்ச்சி நாட்டமுடைய பேச்சு முறை.
Caption
n. கைப்பற்றுதல், ஈர்த்து நிறுத்துதல், சட்டப்படியான பற்றாணை, கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம், தலைப்பு, முனைப்பான முகப்புரை, முகப்புப்படம்.
Captious
a. குறைகாணும் இயல்புடைய, சொற்பொறியில் அகப்படுத்தும் ஆர்வமுடைய, விதண்டையான, தவறான போக்குடைய, பிழைபாடான.
Captivation
n. கவனம் கவர்தல், கவர்ச்சி.
Captive
n. சிறைப்பட்வர், கைதி, தடுத்து நிறுத்தப்பட்டவர், கட்டுப்பட்டவர், கட்டுப்பட்டது, அகப்பட்டது, (பெ.) சிறைப்பட்ட, கட்டுப்பட்ட, வசப்பட்ட, கட்டுப்பட்ட நிலைக்குரிய, தப்ப முடியாத.
Captivity
n. சிறைப்பட்ட நிலை.
Captor
n. சிறைசெய்பவர், கைப்பற்றுபவர், பெறுபவர்.
Captress
n. கைப்பற்றுபவள், பெறுபவள்.
Capture
n. கைப்பற்றுதல், சிறைப்பிடிப்பு, பெறுகை, வசப்படுத்துகை, பிடிபட்டவர்,கைப்பற்றப்பட்டது, (மண்.) மறுகிளைப்பற்றீடு, ஆழ்திற அரிப்பாற்றல், மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள், அகப்படுத்து, கைப்பற்று, சிறைப்படுத்து, பிடி, வென்று கொள், வலிந்துக் கைக்கொள், கொள்ளையிற்பெறு.
Capuchin
n. தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர், 152க்ஷ்-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர், பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை, தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை, தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை.
Caput mortunnm
n. (ல.) அடிமண்டி, கசடு.
Capybara
n. நீரருகே வாழும் உலகின் மிகப்பெரிதளவான கொறிக்கும் உயிரின வகை.
Car
n. வண்டி, சகடம், தேர், இருசக்கரப்பண்டி, நான்கு சக்கர இரதம், விழா ஊர்தி, இழவு செல்கலம், வெற்றித்தேர், விசைவண்டி, உந்துகலம், மின்னுர்தி வண்டி, புகைத் தொடர்வண்டி, உணவுக்கான பெட்டி வண்டி, துயில்வதற்கான தனி வண்டி, விமானச் சுமைகலம்.
Carabineer
n. கைத்துப்பாக்கி ஏந்திய போர்வீரர்.
Caracal
n. காட்டுப்பூனை வகை.
Caracol, caracole
பாதி இடதுபுறமாகத் திரும்புதல், பாதி வலம், அரைவலமாகத் திரும்புதல், சுழல் படிக்கட்டு, (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு, இங்கும் அங்கும் துள்ளிக்குதி.
Caracul
n. கம்பளி ஆட்டு வகை, மென்மயிர் அடர்ந்த தோல் துகில் வகை, தோல் போன்ற செயற்கைத் துணி வகை.
Carafe
n. மேசைமீது வைப்பதற்குரிய நீர்க்குப்பி.
Caramel
n. கருவெல்லம், சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை, தித்திப்புப் பண்ட வகை, இளந்தவிட்டு நிறம், (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு, கருவெல்லமாக்கு.