English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carapace
n. ஆமை ஓடு, நண்டு-நத்தை போன்றவற்றின் மேல் தோடு.
Carapacial
a. நத்தை முதலியவற்றின் மேல் தோடுபோன்ற, ஆமைத் தோட்டுக்குரிய.
Carat
n. ஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை, பொன்னின் மாற்று அளவு, முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.
Caravan
n. சாத்து, பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம், திருத்தல வழிபாட்டுக்குழு, மூடப்பட்டுள்ள வண்டி, கூண்டு வண்டி, சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை, துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை, (வி.) கூட்டமாகப் பயணம் செய்.
Caravaneer
n. பயணம் செய்யும் வணிகர் கூட்டத்தலைவர்.
Caravansary, caravansera, caravanserai
n. வணிகர் கூட்டம் தங்கும் வழிமனை, சத்திரம்.
Caravel
n. நடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை.
Caraway
n. நறுமணக் கனிவிதைகளுடைய குடைப்பூக் கொத்துள்ள செடி.
Caraway-seeds
n. அப்பங்களில் பயன்படுத்தப்படும் குடைப் பூக்கொத்துச் செடிவகையின் கனிவிதை, பெருஞ்சீரகம் போன்ற நறுமண விதை.
Carbauba
n. மஞ்சள்நிற மெழுகு வகை, மெழுகு வகை தரும் பிரேசில் நாட்டுப் பனையின மஜ்ம்.
Carbide
n. கரியகை, கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம்.
Carbine
n. குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் சிறு துப்பாக்கி.
Carbocyclic
a. (வேதி.) மூடுமண்டலிப்புடைய.
Carbo-hydrate
n. (வேதி.) கரிநீரகி, மாச்சத்து வகை-சர்க்கரை-பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம்.
Carbolic
a. நச்சரி நீர்ம வனை, தொற்றொழி நீர்மப் பொருள், (பெ.) (வேதி.) கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்பட்ட.
Carbon
n. (வேதி.) கரியம், உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம், கரிப்பொருள், (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல், கரித்தாள், கரிய வைரம், (பெ.) கரியம் சார்ந்த.
Carbon copy
n. வடிவெடுத்த படி, எழுத்து அல்லது தட்டெழுத்துப்படி.
Carbonaceous
a. கரிபோன்ற, கரிசார்ந்த, நிலக்கரி போன்ற, நிலக்கரிக்குரிய, கரித்தன்மையுள்ள, கரியம் கலந்த.
Carbonado
n. வயிரத்தினும் திண்ணிய மணி உருக் கரியம், கருவயிரம்.
CarbonarI
n. (இத்.) இத்தாலியில் குடி அரசு ஏற்படுத்துவதற்காக (1க்ஷ்11-இல்) உருவாகிய இரகசிய அரசியல் கழகத்தினர்.