English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carrier
n. கொண்டு செல்பவர், சுமை கூலிக்காரர், தூதர், சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர், கொண்டு செல்லும் ஏதேனுமொன்று, தூக்கு கலம், பொதி ஊர்தி, மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி, நோய்கடத்தி, தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம், கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம், செய்தி கொண்டு செல்லும் புறா.
Carrier-pigeon
n. முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா, புறாவகை.
Carriole
n. ஒரு மனிதன் செல்லத்தக்க சிறு வண்டி வகை, விரைமூடு வண்டி, கானடா நாட்டுக்குரிய சறுக்கு வண்டி.
Carrion
n. அழுகும் பிணம், ஊழ்த்த இறைச்சி, இழிபொருள், குப்பைக்கூளம், அழுக்கு, (பெ.) அழுகிய, அருவருப்பான, ஊழ்த்த இறைச்சிக்குரிய, அழுகும் பிணம் தின்கிற.
Carrion-crow
n. பிணம் தின்னும் காக்கை வகை.
Carrion-flower
n. அழுகிய இறைச்சியின் நாற்றமுள்ள மலர்செடிவகை.
Carriwichet
n. தெறுமொழி, காரசாரமான சூட்டுரை நகைத்துணுக்கு, சொற்புரட்டு, சிலேடைப் பேச்சு.
Carronade
n. (வர.) பெருந்துளையுடைய சிறு கப்பல் பீரங்கி.
Carron-oil
n. ஆளிவிதையும் சுண்ணநீரும் கலந்த தீப்புண்ணாற்றும் தைலம்.
Carrot
n. சிவப்பு முள்ளங்கிச் செடி, சிவப்பு முள்ளங்கிக் கிழங்கு.
Carrots, n. Pl.
(பே-வ.) செம்பட்டை மயிர், செம்பட்டை மயிருள்ளவர்.
Carroty
a. தலைமயிர் வகையில் செம்பட்டையான.
Carry
n. வீச்செல்லை, வேக எல்லை, குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம், பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை, சுமப்பு, சுமந்து செல்லுதல், சுமந்து செல்லும் அளவு, படகைச் சுமந்து செல்லுதல், இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி, வாளேந்து நிலை, வானம், முகிலின் இயக்கம், மேகங்களின் செலவு, (வி.) எடுத்துச்செல், ஏற்றிக்கொண்டுபோ, சும, இட்டுக்கொண்டு போ, மனி நிலையில் வைத்துக்கொண்டு நட, மேற்கொள், அணி, ஏந்திச்செல், கொண்டு செல், வலிந்து கைப்பற்று, (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து, ஆற்று, செய்துமுடி, பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று, நிகழக்செய், வெற்றிபெறு, தாங்கு, உடன்கொண்டிரு, உடையவராயிரு, கருவுற்றிரு, நடத்து, நடந்துகொள், தேறுவி, பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு, முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர், பத்திரிக்கையில் செய்தி வௌதயிடு, நிலைக்கூறாக வௌதயிடு, உணர்ச்சி வசப்படுத்து.
Carry-all
n. பளுவற்ற நான்குசக்கரக் குதிரைவண்டி.
Carry-over
n. பங்குமாற்றுத்துறையில் வருதொகையை மறுபுறம் கொண்டு செல்லும் முறைமை, பங்குமாற்றில் முன்பக்கத் தொகை.
Cart
n. இரட்டைச்சக்கர வண்டி, கட்டை வண்டி, வில் வண்டி, (வி.) வண்டியில் ஏற்றிச்செல், வண்டிக்காரனாகத் தொழில் செய்.
Cartage
n. வண்டியில் ஏற்றிச்செல்லுதல், வண்டிக்கூலி.
Carte
-1 n. வாட்போர் நிலைவகை, சிலம்ப முறையில் மணிக்கட்டின் நான்காவது அமைவு நிலை.
Carte
-2 n. உணவுக் கட்டணப்பட்டியல், அட்டையில் ஒட்டப்பட்டுள்ள சிறு நிழற்படம்.
Carte-blanche
n. (பிர.) வெண்முறி, முன்னதாகக் கையொப்பமிடப்பட்ட வெற்றுத்தாள், முழுச்செயலுரிமை.