English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carton-pierre
n. கல்தோற்றம் அளிக்கும் அட்டைப் பலகை வகை.
Cartoon
n. வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம், தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி, அரசியல் வசைக்கேலிச் சித்திரம், (வி.) வசைக்கேலிப்படம் வரை, கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Cartoonist
n. ஏளன ஓவியம் வரைபவர், வேடிக்கை ஓவியர்.
Cartophily
n. புகைப் பூஞ்சுருள் அட்டைத்திரட்டு, 'சிகரட்' அட்டைச் சேமிப்பு.
Cartouch, cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி, வெடி மருந்துப்பெட்டி, (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Cartridge-belt
n. வெடியுறைகள் செருகி வைப்பதற்குரிய கச்சைவார்.
Cartridge-paper
n. கெட்டித்தாள், வரைபடம் எழுதுதற்கும் திண்ணிய உறைகள் செய்வதற்கும் பயன்படும் முரட்டுக்காகிதம்.
Cart-road
n. வண்டிப்பாதை.
Carts-tail
n. வண்டியின் பின் பக்கம்.
Cartulary
n. ஆவணத்தொகுதி, பதிவேடு, திருமடத்தின் பதிவேட்டுத் தொகுதி, ஆவணங்கள் வைத்திருப்பவர், பதிவேடு வைக்கப்படும் இடம், பதிவேடகம்.
Cart-wheel
n. வண்டிச்சக்கரம், ஐந்துவௌளிப் பணம் போன்ற பெரிய நாணயம், பக்கவாட்டுக் கரணம்.
Cartwright
n. வண்டிகள் செய்யும் தச்சர்.
Carucage
n. காணி வரி, ஒரு சோடுமாடு ஒரு பருவத்தில் உழக்கத்தக்க அளவு நிலத்தின் மீது விதிக்கப்பட்ட வரி.
Carucate
n. ஏர்ப்பாசன அளவு, நுப்த்தில் பூட்டிய ஒருசோடு மாடுகள் விளைச்சல் பருவம் ஒன்றில் உழக்ககூடிய நில அளவை.
Caruncle
n. வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
Caruncular, a.
விதைமுடி போன்ற, விதைமுண்டின் இயல்பு வாய்ந்த.
Carunculate
a. விதைமுண்டு உடைய, தசைத்திரளை வாய்ந்த.
Carvacrol
n. துளசியினத்தின் பற்பல பூண்டுகளில் காணப்படும் பல்வலிக்குதவுகிற கெட்டிமை வாய்ந்த எண்ணெய்.
Carve
v. செதுக்கு, செதுக்கி உருவாக்கு, வெட்டியமை, குடைந்து உண்டுபண்ணு, குறுக அரி, கொத்து, செதுக்கி உருவமாற்று, உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய், மாதிரிப் படங்களைச் செதுக்கு, இறைச்சி வெட்டித் துண்டாக்கு, வெட்டிப் பகிர், சிற்பத்தொழில் நடத்து, சிற்பவேலைச் செய்.
Carvel-built
a. பலகைகள் ஒன்றன்மீது ஒன்று ஏறாமல் சம மட்டமாயிருக்கும்படிக் கட்டப்பட்ட.