English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carven
a. செதுக்கப்பட்ட, செதுக்கி உருவாக்கப்பட்ட.
Carver
n. செதுக்குபவர், மரவேலைச் சிற்பி, சிற்பி, இறைச்சி அறுக்க உதவும் கத்தி.
Carvers
n. pl. இறைச்சி அறுக்க உதவும் கத்தியும் கவர்முள்ளும்.
Carving
n. சிற்பவேலை, மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குவேலை, செதுக்கி அமைக்கப்பட்ட உருவம், உணவு மேசையில் இறைச்சி அறுத்தல், உணவு மேசையில் இறைச்சி அறுக்கும் கலை.
Carving-knife
n. இறைச்சி அறுக்க உதவும் பெரிய கத்தி.
Caryatic
a. தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை பற்றிய.
Caryatid
n. சிலையுருவத் தூண், தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலை.
Caryopsis
n. (தாவ.) உமியுடன் ஒட்டிய தானிய வகை, முதிரை.
Cascabel
n. பீரங்கியின் பின்புறக்குமிழ்.
Cascade
n. அருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு.
Cascara, cascara sagrada
n. (ஸ்பா.) குடலிளக்கும் நன் மருந்தாகப் பயன்படும் வட அமெரிக்காவின் கலிபோர்னிய நாட்டு மரப்பட்டை வகை.
Casco
n. சரக்குகளைக் கொண்டு சென்று கப்பலில் ஏற்றி இறக்கும் பிலிப்பைன் தீவுகளுக்குரிய படகு வகை.
Case
-1 n. பை, கூடு, உறை, பெட்டி, தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு, (வி.) பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு.
Case
-2 n. நிகழ்ச்சி, நேர்ச்சி, நேர்வு, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை, செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, நிலை, நிலைமை, சூழ்நிலை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை வ
Case
-3 v. திருட்டை முன்னிட்டுப் புலம் பார்.
Caseation
n. உறைபாற் கட்டியாக மாறுதல்.
Case-book
n. மருத்துவரின் தொழில்முறைக் குறிப்பேடு.
Case-bottle
n. பெட்டியில் குப்பியுடன் குப்பி பொருந்த வைப்பதற்கு வாய்ப்பான சதுரவடிவக் குப்பியுறை.
Case-harden
v. பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்து, மரத்துப்போகச் செய், உணர்ச்சியற்ற நிலை உண்டுபண்ணு.
Case-hardening
n. பரப்பில் கரியகமூட்டுவதன் மூலம் இரும்பைப் கடும்பதப்படுத்துதல், இரும்பில் கடும்பதம், உணர்ச்சியின்மை.