English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cash counter
பணம் வழங்கறை, பட்டுவாடா அறை, பணம் வழங்குமிடம்
Cash-account
n. பணவகைக் கணக்கு, ரொக்கக் கணக்கு, பொருளகத்தில் சில்லறைக்கடன் வாய்ப்பு அளிப்பதற்கான தனிக் கணக்கேடு.
Cash-book
n. பண வரவு செலவுக் குறிப்பேடு.
Cash-credit
n. பொருளகத்தில் சில்லறைக் கடன் வாய்ப்பு அளிப்பதற்குரிய தனிக் கணக்கீடு.
Cashew
n. முந்திரிப்பழம், கொல்லா மாமரம்.
Cashew-apple
n. முந்திரிப்பழம், கொல்லாமாம்பழம், முந்திரி மரத்தில் பழமாகக் கருதப்படும் சதைப்பற்றுமிக்க விதைக்காம்பு.
Cashew-nut
n. முந்திரிக்கொட்டை, அண்டிக்கொட்டை, கொல்லாமாங்கொட்டை.
Cashier
-1 n. காசுக்கணக்கர், பணம் கொடுக்கல் வாங்கல் கணக்குப் பணியாளர்.
Cashier
-2 v. அவமானத்தோடு வௌதயேற்று, வேலையிலிருந்து தள்ளு, கண்டித்துப் பதவியிலிருந்து நீக்கு, தள்ளிவை, ஒழி.
Cashierment
n. பணி நீக்கம்.
Cashmere, cashmere shawl
n. காசுமீரச் சால்வை, மென்மைமிக்க காசுமீர வௌளாட்டு மயிராலான கம்பளிப் போர்வை, காசுமீரச் சால்வைப் போலி.
Cash-payment
n. நாணயப்பணம் கொடுத்தல், பொருளக முறிக்குப் பணம் கொடுத்தல்.
Cash-price
n. கைப்பண விலை, ரொக்க விலை.
Cash-railway
n. வாணிக நிலையங்களில் வாடிக்கை மேடையிலிருந்து பெட்டியடிக்குப் பணம் சேர்க்கும் பொறி, காசுய்க்கும் பொறி.
Cash-register
n. வாணிகக்களங்களின் இடுபணக் கணக்குப் பொறி.
Casing
n. பெட்டியிலடைத்தல், உறையில் செறித்தல், பொதித்தல், பொதியுறை, மேலுறை, கவிகை, புறத்தோடு.
Casino
n. பொது ஆடரங்கம், நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை, சீட்டாட்ட வகை.
Cask
n. மிடா, மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை, மிடா அளவு குடிவகை, குடிவகை அளவு, (வி.) மிடாவில் அடை.
Casket
n. பேழை, சிறு மிடா, பெட்டகம், அணிமணிப்பெட்டி.
Caslon, Caslon type
n. வில்லியம் காஸ்லான் (மறைவு 1ஹ்ஹ்6) என்பவர் உருவாக்கிய அச்சுருப்படிவம், காஸ்லானின் முறை பின்பற்றிய அச்சுருப்படிவம்.