English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Castanents
n. pl. காழ்மரம் அல்லது தந்தத்தால் செய்யப்பட்டுக் கிலுக்கிசையுடன் நடனங்களில் கைவிரல்களுக்கிடையே வைத்துப் பயன்படுத்தப்படும் ஒரு கைத்தாளக் கட்டை வகை.
Castaway
n. புயலால் கரையில் தள்ளப்பட்டவர், உடைகலப்பட்டோ ர், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோ ர், துணையிலி, பழிகேடன், (பெ.) ஒதுக்கப்பட்ட, தள்ளப்பட்ட, பயனற்ற.
Caste
n. சாதி, பிறப்படிப்படையான செயற்கைச் சமுதாயப் பிரிவு, ஒட்டறுத்து வாழவிரும்பும் சமுதாய வகுப்பு, தனிவாழ்வுடைய வகுப்பு, சாதி முறை, சாதிப்படி, சாதிமதிப்பு, சமுதாயத் திரிபியல் வடிவப்படிவம்.
Casteless
a. சாதியற்ற, சாதியிழந்த.
Castellan
n. அரண்மாடத் தலைவர், அரண்மாளிகை ஆட்சியாளர்.
Castellated
a. அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய, அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய.
Castigate
v. தண்டி, கண்டித்துரை, அடித்து ஒறு, திருத்தம் செய், பாட திருத்தம் செய்.
Castigation
n. கண்டித்துத் திருத்ததல், கடுந்தண்டனை, கடிந்துரை, காரசாரமான திறனாய்வு.
Castigator
n. கண்டிப்பவர், கண்டனம் எழுப்புபவர்.
Castile
n. ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி.
Castilian
n. ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர், காஸ்டீல் வாழ்நர், காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி, (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.
Casting
n. எறிதல், இடுதல், போடுதல், வார்ப்படம், வார்ப்பு, வார்ப்புக்குரிய பொருள், வார்ப்புரு.
Casting-net
n. எறிவலை, வாய்ப்பக்கம் கீழ்நோக்க எறிந்து மையமூடாக நாற்புறக்கோடியும் இழுக்கப்படத்தக்க வகையில் அமைவுற்ற பெரிய வட்ட வடிவான வலை.
Casting-vote
n. தீர்வுமொழிச்சீட்டு, முடிவுவாக்கு, சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Casting-weight
n. சாய் எடை, சர்சமநிலையை ஏதேனும் உருபுறமாக்கவல்ல மிகை எடை.
Cast-iron, cast iron
n. வார்ப்பிரும்பு, கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை, வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு, (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட, கடினமான, சோர்வுறாத, உறுதிவாய்ந்த, விறைப்பான, வளைந்து கொடுக்காத, மாற்றியமைக்க முடியாத.
Castle
n. காப்பரண் மாளிகை, காப்பரண், காவற்கோட்டை, அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம், பெருமக்கள் மாளிகை, தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி), யானைமீதுள்ள காப்புக்கூண்டு, அம்பாரி, பெருங்கப்பல், படைநாவாய், (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Castle-builder
n. மனக்கோட்டைக் கட்டுபவர், பகற்கனவாளர், கற்பனைத் திட்டங்களிடுபவர்.
Castle-building
n. மனக்கோட்டைக் கட்டுதல், பகற்கனவு காண்டல்.
Castled
a. காப்பரண் மாளிகைகளையுடைய, காவற்கோட்டைகளைக் கொண்ட.