English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Castle-guard
n. காப்பரண் மாளிகைக் காவலர், மனக்கோட்டைக் காவலர்.
Castle-nut
n. பொட்டுமரை, இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Cast-off
n. கழிபொருள், பயனற்றதென ஒதுக்கி எறியப்பட்ட பொருள், (பெ.) தூக்கி எறியப்பட்ட, ஒதுக்கப்பட்ட.
Castor
n. கிரேக்க பழங்கதையில் குதிரை பழக்குதலில் வல்லுநனான லீடாவின் இரட்டைப் பிள்ளைகளுள் ஒருவன், மிதுனமனை வான்மீன்குழுவின் ஒண்மீன்.
Castor
-1 n. உழன்றி, உழலை, இருக்கைகளின் கால்களில் பொருந்திய திருகுசுழல் சக்கரம், தௌதபுட்டில், திவலைகள் கொட்டும் முகடு உடைய கலம், உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்களுக்குரிய கலம்.
Castor
-2 n. நீர்நாய் போன்ற கொறிக்கும் விலங்கினம், விலங்கின வகையின் பிட்டத்தின் சுரப்பி நீரிலிருந்து உண்டுப் பண்ணப்படும் வன்மண மருந்துப்பொருள் வகை, நீர்வாழ் விலங்கின வகையின் மென் மயிர்த்தோல், மென் மயிர்த்தோல் தொப்பி.
Castor
-3 n. குதிரைக் காலடியில் கல் போன்ற கரணை.
Castoreum
n. நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி, நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பியிலிருந்து உண்டுப்பண்ணப்படும் கூர்மணப்பொருள்.
Castor-oil
n. ஆமணக்கு வகையின் எண்ணெய், குடவிளக்க மருந்தாகவும் மசகெண்ணெய்யாகவும் வழங்கும் தாவர எண்ணெய் வகை.
Castors
n. pl. உணவு மேடையில் துணைச்சுவைப் பொருள்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
Castory
n. செந்நிறம், நீலச்சாயலார்ந்த செந்நிறம்.
Castral
a. கூடாரத்துக்குரிய.
Castrametation
n. கூடார அமைப்புக்கலை.
Castrate
v. விதையடி, ஆண்மைப் போக்கு, இனப்பெருக்க ஆற்றல் அழி, மெலிவி, குறைபடுத்து, அகற்றிக்குறை உண்டுபண்ணு, வெட்டிக்குறை, கத்தரித்துக்குறை, தீமையகற்று, தூய்மைப்படுத்து.
Castrated
a. விதையடிக்கப்பட்ட, தீமை அகற்றப்பட்ட, தூய்மையாக்கப்பட்ட, இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
Castration
n. விதையடிப்பு, இனப்பெருக்க ஆற்றலழிப்பு, (உயி.) விதை நீக்க அறுவை, (தாவ.) கருவக நீக்கம், மலரின் பூவிழை நீக்கம்.
Cast-steel
n. அடித்து உருவாக்கப்படாமல் வார்த்து உருவாக்கப்பட்ட எஃகு.
Casual
n. தற்செயல் வருகையாளர், இடைவரைவாளர், நாட் கூலியாள், ஒரோவொரு சமயம் உதவி நாடும் பஞ்சை, (பெ.) தற்செயல் வருகையான, இடைவரைவான, திட்டமிடப்படாத, காலத்திற்பட்ட, காலப்போக்கிலேற்பட்ட, கைப்போக்கான, முயற்சியற்ற, முறைமைப்படாத.
Casualism
n. எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு, காரிய காரண மறுப்புக்கோரிக்கை.
Casually
adv. தற்செயலாக, எதிர்பாராமல், போகும்போக்கிலே, இடையே.