English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cataclysm
n. பிரளயம், ஊழிப்பெருவௌளம், திடீர் மாறுபாடு, அரசியல் கொந்தளிப்பு, சமூகப்புரட்சி.
Catacomb
n. அடிநிலக் கல்லறை, சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
Catacombs
n. pl. அடிநிலக் கல்லறைத் தொகுதி, கட்டுகற்களுக்காக வெட்டிக் குடையப்பட்ட நிலக்குடைவு.
Catacoustics
n. (இய.) எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு.
Catacumbal
a. அடிநிலக்கல்லறை போன்ற.
Catadromous
a. (வில.) முட்டையிடுவதற்காக ஆற்றுமுகம் அல்லது கடலுக்குப் பருவந்தோறும் செல்கிற.
Catafalco, catafalque
n. பாடை, கல்லறை வடிவில் அமைக்கப்பட்ட பிணங்கொண்டு செல்வதற்குரிய ஊர்தி.
Catalectic
a. முடிவுறாத, நிறைவற்ற, (இலக்.) கடைக்குறையான, அடியிறுதியில் ஓர் அசை குறைந்த.
Catalepsy
n. மூடுசன்னி, உணர்ச்சியிழந்து உடம்பு விறைத்துப் போகச் செய்யும் நோய் வகை, விலங்குகள் உயிரிழந்தன போலச் செயலிழந்து கிடக்கும் நிலை, சா விறைப்பு.
Cataleptic
n. மூடுசன்னி நோயாளி, (பெ.) மூடுசன்னிக்குரிய, மூடு சன்னி கண்ட, சா விறைப்புச் சார்ந்த.
Catalexis
n. கடைக்குறை, பாவின் அடியிறுதியில் ஓர் அசை குறைந்திருத்தல்.
Catallactic
a. நாணய மாற்றுக்குரிய.
Catallactics
n. நாட்டுப் பொருளியல்.
Catalogue
n. பெயர்ப்பட்டியல் வரிசை, (வி.) பட்டியல் வரிசை தொகு, நுல்கள் முதலியவற்றின் பெயர்களைப் பட்டியலில் சேர்.
Cataloguer
n. பட்டியல் தொகுப்பவர்.
Cataloguise
v. பட்டியல் அடைவுசெய்.
Catalpa
n. நெஞ்சுப்பை போன்ற இலைகளையும் ஊதுகொம்பு போன்ற மலர்கயையும் உடைய மரவகையின் இனம்.
Catalyse
v. (வேதி.) கடுவினைக்கு உட்படுத்து, இயைபியக்கம் ஊக்கி.
Catalysis
n. (வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
Catalyst
n. (வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.