English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cassandra
n. கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி, எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
Cassareep, cassaripe
ஆற்றல்சான்ற நச்சரியாகவும் சுவைப்பொருளாகவும் பயன்படும் கசப்பான கூவைக் கிழங்கு வகையின் சாறு.
Cassation
n. துடைத்தழிப்பு, ஒழிப்பு, நீக்கம், முறைமன்றத் தீர்ப்பு நீக்கம்.
Cassava
n. கூவைக்கிழங்குவகை, மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை, கூவைக்கிழங்கு வகையின் மாவு, கிழங்குவகையின் மாச்சத்து, கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம்.
Casserole
n. புழுக்குத்தட்டம், கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்.
Cassette
பேழில், பேழை, நாடா
Cassia
n. தாழ்ந்ததரக் கருவாய்ப்பட்டைவகை, கருவாமரவகை.
Cassia
n. நிலவாகை, பேதிமருந்தாகப் பயன்படும் இலையுடைய செடிவகை.
Cassimere
n. மணியிழை நேரியல் கம்பளி ஆடைவகை.
Cassino
n. சீட்டாட்ட வகை.
Cassock
n. ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை, ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை.
Cassolette
n. நறும் புகைக்கலம், தூபக்கலம், முகடுதுளையரிப்பிட்ட மணப்பொருட்பேழை, நறுமணப் பெட்டி.
Cassonade
n. துப்புரவு ஆக்கப்படாத சர்க்கரை.
Cassowary
n. நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை.
Cassumunar
n. கிழக்கிந்தியத் தீவுகளின் இஞ்சி வகை.
Cast
-1 n. எறிதல், வீச்சு, தூண்டில் எறிவு, எறிபடை வீச்சு, ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு, தூண்டில் முனைப்பகுதி, தூண்டிவிடத் தக்க இடம், எறிதொலை, வார்ப்புரு, வார்ப்புருவின் வார்ப்பட அச்சு, உருவம், வடிவம், பொறிப்பு, வண்ணம், நிறத்தின் சாயல், பண்பு, குற்ற அளவு, நாட
Cast(2), v. cast
-1 என்பதன் இறந்தகால முடிவெச்சவடிவம்.
Castalia
n. கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று, கவிதையூட்டு.
Castalian
a. கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய, கவிதையூற்றுக்குரிய.