English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Casehistory
n. முன் மரபு, மருத்துவத்துக்கான தனி வரலாறு-மரபு-சூழல்கள் பற்றிய விளக்கத்தாள்.
Casein
n. பால்புரதம், உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறு.
Case-knife
a. எப்போதும் உறையிலேயே வைக்கப்படும் பெரியகத்தி வகை, பட்டாக் கத்தி.
Case-law
n. தீர்ப்புவழிச்சட்டம், முன்வழக்குத் தீர்ப்புகளைப் பின்பற்றிவந்த மரபுச்சட்டம்.
Case-maker
n. புத்தக மேலட்டை செய்பவர்.
Case-man
n. அச்சுக்கோப்பவர்.
Casemate
n. அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம், காப்பாண் மாடம், போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
Casemated
a. காப்பரண் மாடத்தையுடைய, கவசமாடம் வாய்ந்த, காப்பரண் பாதுகாப்புடைய, கவசமாடக் காப்பிணைக் கொண்ட, காப்பரண் மாடம் போன்ற கட்டுமானமுடைய, கவசமாடம் போன்ற.
Casement
n. பலகணிச்சட்டம், மடக்கும் பலகணிக்கதவின் திருகுமரையிட்ட மடிப்பு, (செய்.) பலகணி, உட்குடைவான, செதுக்குமானம்.
Casement-cloth
n. பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் துணிவகை.
Casement-curtain
n. பலகணிச் சட்டத்தில் தொங்கவிடப்படும் திரை, பலகணித்திரை.
Casemented
a. மடங்கு மடிப்புடைய சட்டத்தையுடைய.
Casement-widow
n. மடக்குப் பலகணி.
Caseous
a. உறைபாற்கட்டியைச் சார்ந்த, உறைபாற்கட்டி போன்ற.
Casern, caserne
அரணின் படைவீரர் தங்குமனை வரிசை.
Case-shot
n. சிதறு குண்டாகப் பயன்படுத்தப்படும் இரவைக் குண்டுகளடங்கிய தகர அடைப்பு.
Case-work
n. சமூகப்பணியிடையே தனிமனிதனைப்பற்றிய கவனிப்புக் கூறு.
Case-worm
n. ஈ வகையின் நீரில் மிதக்கவிடப்படும் முட்டைப்புழு.
Cash
-1 n. (த.) காசு, நாணயம், சீன நாட்டுச் செப்புநாணயம்.
Cash
-2 n. கெட்டிப்பணம், உடனடிப்பணம், ரொக்கம், பொருளகத்துறையில் நாணயப்பணம், நாணயப்பணமும் பொருளக நாணயத் தாளும் மட்டுமே அடங்கிய தொகை, (வி.) பொருளக நாணயத்தாள்-பொருளகமுறி ஆகியவற்றுக்குரிய பணம் வழங்கு, நாணயப்பணமாக மாற்று.