English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Carte-de-visite
n. (பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம், மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம்.
Cartel
v. மற்போருக்கு அறைகூவற்சீட்டு, சிறைப்பட்டவர்களை மாற்றிக்கொள்ளுதல், போர்க்கைதிகளை மாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கை, எழுதப்பட்டுள்ள அட்டை, அரசியல் கூட்டு நிலை, அரசியல் கட்சிகளின் கூட்டணி, போரிடையே இருதரப்புக்களுக்கும் இடைப்பட்ட கட்டுப்பாடு, போரிடையே பாதுகாப்புக் கட்டுப்பாடுடைய கப்பல், போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி.
Cartelize
v. பொதுப்பணிக்காக வணிக நிலையங்களின் கூட்டணி உண்டுபண்ணு, வணிகநிலையக் கூட்டணியின் ஆட்சிக்குட்படுத்து, வணிகநிலையக் கூட்டணியாக அமை.
Carter
n. வண்டி ஓட்டுபவர்.
Cartesian
n. பிரஞ்சு மெய்ந்நுலாசிரியராகிய ரேனே டேகார்ட் (15ஹீ6-1650) என்பவரது மெய் விளக்கத்துறையைப் பின்பற்றுபவர், (பெ.) பிரஞ்சு மெய்ந் நுலாசிரியராகிய டேகார்ட் என்பவரது மெய்விளக்கத் துறைக்குரிய, டேகார்ட்டின் உடனிணைவு முறைமைக்குரிய.
Carthamine
n. குங்குமப் பூவிலிருந்து செய்யப்படும் சாயப்பொருள்.
Cart-horse
n. வண்டியிழுக்கத்தக்க குதிரை.
Cart-house
n. வண்டிக் கொட்டில்.
Carthusian
n. தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர், கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர், (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய, கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Cartilage
n. குருத்தெலும்பு.
Cartilaginoid
a. குருத்தெலும்பு போன்ற.
Cartilaginous
a. குருத்தெலும்புக்குரிய, குருத்தெலும்பாலான, முள்முனைப்பான, குருத்தெலும்பு போன்று கெட்டிப்புடைய, (உயி.) எலும்புச்சட்ட முழுதும் குருத்தெலும்பாலான.
Cart-ladder
n. சுமையின் இட அளவைப் பெருக்குவதற்காகப் பக்கவாட்டில் பொருத்தப்படும் சட்டம்.
Cart-load
n. வண்டிச்சுமை, பார அளவு, ஒருவண்டிச்சுமை.
Cartographic, cartographical
a. நிலப்படத்துக்குரிய, தேசப்படம் வரைதல் பற்றிய.
Cartography
n. நிலப்படத்துறை, தேசப்படம் வரைதல்.
Cartology
n. நாட்டுப் படங்கள் மனை விளக்கப்படங்கள் ஆகியவற்றின் ஆய்வுத்துறை.
Cartomancy
n. ஆட்டச் சீட்டுக்களை வைத்துக் குறி சொல்லும் முறை.
Carton
n. எய்குறியின் நடுவில் உள்ள வௌளைச்சில்லு, மையச் சில்லின்மேல் படும் வேட்டு, பொருள்கள் வைப்பதற்கான அட்டைப்பெட்டி, பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் அட்டை.
Cartonnage
n. தாள் அட்டை, அட்டைப் பலகை, பதனப்பிணத்தின் மேற்கவிகை.