English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Catchpenny
n. வெறும் பகட்டுப் பொருள், விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள், (பெ.) வெறும்பகட்டான.
Catchphrase
n. கவர்மொழி, சுலோகம், கருத்தைக் கவரும் சொற்றொடர்.
Catchpole, catch-poll
n. ஏவலர், நீதித்துறை அலுவலர்.
Catch-the-ten
n. துருப்புச் சீட்டின் பத்தினைக் கைப்பற்றுவதே நோக்கமாயுள்ள சீட்டாட்ட வகை.
Catch-weed
n. முரட்டுத் தண்டினையுடைய செடிவகை.
Catchword
n. கொளுச்சொல், நடிகரின் தூண்டு சொல், அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல், ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல், அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல்.
Catchy
a. கவர்ச்சியுள்ள, எளிதில் உளங்கொள்ளத்தக்க, மருட்சி தருகிற, விட்டுவிட்டு நடைபெறுகிற.
Catechetic, catechetical
a. வினாவிடை வடிவான, வினாவிடை முறையொன்றை ஒட்டிய, வினாவிடைமுறை பற்றி நடக்கிற, வாய்மொழியான, வாய்மொழிப் பாடத்துக்குரிய, கிறித்தவசமய அடிப்படைக் கொள்கைகளை வாய்மொழியாய்க் கற்பிப்பதற்குரிய.
Catechetics
n. வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை, வினாவிடைப் போதனை முறை, செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம்.
Catechism
n. வினாவிடையாகக் கற்பிக்கப்படும் பாடம், சமயத்துறை வினாவிடை ஏடு, கேட்கப்படும் கேள்வி வரிசை.
Catechist
n. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவர், கிறித்தவ சமயம் புக விரும்பும் மாணவர்களுக்குப் பாடங்கற்பிப்பவர், சமயப் பரப்புத் திருச்சபையின் உள்ளுர் ஆசிரியர்.
Catechistic, catechistical
a. வினாவிடையாகப் பாடம் கற்பிப்பவருக்குரிய, வினாவிடைப் பாடமுறை சார்ந்த.
Catechize
a. வினாவிடையாகப் பாடங்கற்பி, வினாவிடை விளக்க மூலம் மெய்ம்மை புகட்டு, வினா எழுப்பி விடை விளக்கங்கேள், வினவி ஆராய்.
Catechumen
n. தீக்கைக்குமுன் கிறித்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
Catechumenical
a. தீக்ககுமுன் கிறித்தவ சமய உண்மைகள் கற்பிக்கப் பெறும் இளம் மாணவருக்குரிய.
Categorically
adv. கட்டுறுதியாக, மாறுபாட்டுக்கு இடமின்றி, ஆணித்தரமாக.
Categories
n. pl. (மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள், காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Categorise
v. தரம் பிரித்திணை, வகைப்படுத்து.
Categorist
n. வகைப்படுத்துபவர், வகைப்பிரிவு ஆய்வாளர்.