English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cathay
n. (செய்.) சீனதேசம்.
Cathead
n. நங்கூரம் தாங்கும் கப்பல் தூலம்.
Cathedral
n. மாவட்டத் தலைமைக் கிறித்தவக்கோயில், (பெ.) மாவட்டத் தலைமை கிறித்தவக்கோயிலுக்குரிய, மாவட்டக் கிறித்தவத் திருச்சபைத் தலைவர் பதவிக்குரிய.
Catherine-wheel
n. ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம், சக்கரச் சாளர அறை, சுழல் பூவாணம், பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம், (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Catheter
n. (மரு.) சிறுநீர் இறக்குங் குழல், நீர்மம் அல்லது வளிகளை உடற்குழாய்களில் ஏற்றவோ வடியவிடவோ உதவும் குழல்.
Cathetometer
n. மட்டமானி, குழல்களில் உள்ள வெவ்வேறு நீர்மங்களின் நுண்ணிய மட்ட வேறுபாடுகளை அளப்பதற்கான கருவி.
Cathetus
n. (வடி.) செங்கோடு, மற்றொரு நேர்வரைக்கு அல்லது தளத்திற்குச் செங்குத்தாகவுள்ள நேர்வகை.
Cathexis
n. (உள.) ஒருபொருள் அல்லது கருத்துச் சார்ந்த மன அவா ஆற்றலின் அளவு.
Cathode
n. (இய.) எதிர்மின்வாய்.
Cathodography
n. (இய.) ஊடு கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நிழற்படம்.
Cat-hole
n. கப்பலின் பின்புழை வாய்கள் இரண்டில் ஒன்று.
Catholic
n. ரோமன் கத்தோலிக்கர், ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர், (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய, முழுநிறைவான, அகல்விரிவான, பொதுவான, கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட, முதுமுறைச்சார்பான, மரபறாத, நீண்மரபுத் தொடர்புடைய, தாராளமாக, விரிந்த மனப்பான்மையுள்ள, சமயப் பொறுமைவாய்ந்த, பெருமனம் உடைய, கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த, ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Catholicism
n. ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடுகள்.
Catholicity
n. எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை, விரிந்த உளப்பாங்கு, அகவெறுப்பின்மை, காழ்ப்பின்மை, கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Catholicize
v. கத்தோலிக்கர் ஆக்கு, கத்தோலிக்க மயமாக்கு, கத்தோலிக்கர் ஆகு.
Catholicon
n. பலநோய் மருந்து, சஞ்சீவி.
Catilinarian
a. துணிகரச் சதிகாரத் தன்மையுடைய.
Catiline
n. துணிகரச் சதிகாரன், கி.மு. 63-இல் ரோமாபுரிஅரசைக் கவிழ்க்க முயன்று தோல்வியுற்ற செர்கியஸ் கேட்டிலினா என்பவன்.
Catkin
n. மஞ்சரி, வளைமலர்க்கொம்பு, ஒருபால் மலரிழைச் சிதற் குஞ்சம்.
Cat-lap
n. கீழ்த்தர மதுவகை.