English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Category
n. வகையினம், முழுமையின் வகைப்பிரிவுகளில் ஒன்று, கருத்தப்படியான பொருள் வகுப்பு, உறுதியுடன் அறியப்பட்ட பண்புக்குழு.
Categotical
a. உறுதியான, ஐயத்துக்கு இடமற்ற, புறனடையற்ற, மறுப்புக் கிடமற்ற, ஆணித்தரமான, வௌதப்படையான, நேர்முகமான, ஔதமறைவில்லாத.
Catena
n. (ல.) சங்கிலித்தொடர், இணைந்த தொடர், கோவை.
Catenarian, catenary
சங்கிலி வளைவு, செங்குத்துக்கோட்டிலமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாய்த் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நௌதவு, (பெ.) சங்கிலி நௌதவு போன்ற, சங்கிலி நௌதவுக்குரிய.
Catenate
v. சங்கிலிபோல் இணை, தொடு, சங்கிலியால் இணை, (பெ.) சங்கிலிபோல் இணைக்கப்பட்ட.
Catenation
n. சங்கிலி இணைப்பு, தொடுப்பு.
Cater
v. உணவு ஏற்பாடு செய், உணவு வழங்கு, நேரப்போக்களித்து மகிழ்வி, வேண்டியவற்றைத் தேடிக் கொடு, விரும்புவனவற்றை நிறைவேற்று.
Caterer
n. உணவு ஏற்பாடு செய்பவர், உணவு தருவிப்பவர்.
Cateress
n. உணவு ஏற்பாடு செய்பவள்.
Catering
n. உணவு தருவிப்பு, களியாட்டம் ஏற்பாடுசெய்தல்.
Caterpillar
n. விட்டிற் பூச்சியினத்தின் முட்டைப் புழு, கம்பளிப்புழு, கம்பளிப் பூச்சி, உழைக்காமல் உண்பவர், உருள்கலங்களின் சுழலுருளை, சக்கரங்கள் பதிந்துருளும் இடையறச் சங்கிலிக் கோவை.
Caterwaul
n. பூனையின் அலறல், (வி.) பூனைப்போல் கிறிச்சென ஒலியெழுப்பு, பூனைகள் போல் சண்டையிடு.
Caterwauling
n. பூனையின் அலறல் ஒலி.
Cates, n. Pl.
அருஞ்சுவைப் பொருள்.
Cat-eyed
a. பூனைக் கண்களையுடைய, இருளில் பார்க்கவல்ல.
Cat-fish
n. பூனைப்போன்ற அமைப்புடைய மீன்வகை.
Catgut
n. விலங்கின் குல்ல் தசைநாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை, நரம்புக்கம்பி, நரப்பிசைக்கருவியின் தந்தி, முரட்டுவடத் துணிவகை.
Catharise
v. முற்றும் துப்புரவிடையதாகச் செய்.
Catharsis
n. துப்புரவாக்குதல், (மரு.) வயிற்றிளக்கம், பேதி, குடல்கசடு நீக்கம், நாடக முதலியவற்றால் ஏற்படும் உணர்ச்சித்தூய்மை.
Cathartic
n. (மரு.) பேதிமருந்து, (பெ.) பேதியாகிற, குடலிளக்கம் உண்டுபண்ணுகிற.