English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Causative
n. (இலக்.) பிறவினை, (பெ.) காரணமாகச் செயற்படுகிற, விளைவுண்டாக்குகிற, (இலக்.) செயல் தூண்டுதல் காட்டுகிற.
Cause
n. ஏது, காரணம், வினைமுதல், நிமித்தம், ஊக்குவிக்கும் நோக்கம், காரண விளக்கம், செயல் முதல் விளக்கம், குறிக்கோள், இலக்கு, சார்புநலம், ஆக்க நலம், (சட்.) வழக்காடும் பொருள், வழக்கு முதல், வழக்கில் ஒரு திறக்கட்சி, வழக்கு, (வி.) தூண்டு, செய்வி, நிகழ்த்து, விளைவி, உண்டுபண்ணு, நிலைபெறச்செய்.
Cause celebre
n. (பிர.) மக்கள் கவனத்தைக் கிளறிவிடும் நீதிமன்ற வழக்கு.
Causeless
a. காரணமற்ற, தற்செயல் நிகழ்வான, நேர்மையற்ற, நேரிய ஆதாரமற்ற.
Cause-list
n. (சட்.) விசாரணை செய்யப்படவிருக்கிற வழக்குகளின் பட்டியல், வழக்கு அட்டவணை.
Causerie
n. (பிர.) வறுமொழி, வெட்டிப்பேச்சு, இலக்கியம் அல்லது கலை குறித்து அளவளாவுதல்.
Causeuse
n. (பிர.) இருவருக்கான சாய்விருக்கை.
Causeway, causey
கடப்பு வழி, கரைப்பாலம், பள்ளம் படுகை கடக்கும் சிறு மேட்டுப்பாதை, பால அருகான நடைபாதை, (வி.) கல்பாவு, மேட்டுப்பாதை அமைத்துக்கொடு.
Caustic
n. கடுங்காரம், எரிச்சல் தரும் பொருள், உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள், (கண.) கோட்ட ஔதவரி, கோட்ட ஔதத்தனம், எதிர்நிழல் ஔதவரை, எதிர்நிழல் ஔதத்தளம், (பெ.) எரிவந்தம் தருகிற, அரித்துத்தின்கிற, வெறுப்புத் தருகிற, கடுமையான, உள்ளத்தைப் புண்படுத்துகிற, குத்தலான, (இய.) நௌதவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஔதக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
Causticity
n. கடுகடுப்பு, அரிக்குந்தன்மை, குத்தலான பேச்சு, தெறுமொழி.
Cauter
n. கடுங்காரத் தீய்வு, சூட்டுக்கோலினால் சூடு இடுதல், புண்ணில் சுடுவதற்கான சூட்டுக்கோல், புண் நச்சுறுப்பதற்குரிய கடுங்காரப் பொருள்.
Cauterize
v. சூடுபோடு, சூட்டுக்கோலினால் சூடிடு, கடுங்காரப் பொருளினால் புண்ணைச்சுடு, உணர்ச்சி அறச்செய்.
Cautery
n. சூடிடுதல், சூட்டுக்கோல்.
Caution
n. முன்மதி, எச்சரிக்கை, முற்காப்புணர்வு, எதிரதாக்காக்கும் அறிவு, பிணையம், (வி.) எச்சரிப்புச் செய், முன்னறிவிப்புச் செய், எச்சரித்துக்கண்டி.
Cautionary
a. எச்சரிப்பான, முன்னுறுதியாக அளிக்கப்பட்ட.
Cautious
a. கவனமுள்ள, எச்சரிக்கையாயிருக்கிற, விழிப்புடைய, முன்மதியுடைய.
Cavalcade
n. புரவிவீரர் பந்தி, படை அணிவகுப்பு, (வி.) குதிரைகளின்மீது இவர்ந்து பவனிசெல்.
Cavalier
n. குதிரைவீரன், பண்புடைப் பெருந்தகை, வீரத்திருத்தகை, பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர், அணங்கின் உடன்செல் பாங்கர், நடனத் துணைவர், வீறாப்புக்காரன், கோட்டை உயர் மேடை, பதனம், (பெ.) குதிரை வீரன் போன்ற, வீரப்பண்பார்வமுள்ள, போர்விருப்புடைய, ஒய்யாரமான, வீறாப்பான, கவலையற்ற, துணிகரமான, களிகிளர்ச்சி கொண்ட, (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல், பெருந்தகையாயிரு, வீறாப்புடன் நடந்துகொள்.
Cavalier
-1 n. (வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ரஸ் காலத்திய அரசக்கட்சியினர்.
Cavalierish
a. பண்புடைப் பெருந்தகையின் இயல்புள்ள.