English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cavalierism
n. (வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் காலத்திய மன்னர் கட்சியினர் கோட்பாடு, மன்னர் கட்சியினர் மரபு.
Cavalierly
a. பெருந்தகைப்பண்புடைய, பெருமிதன்ன, வீறாப்பான, (வினையடை) பெருந்தகைப்பண்புடன், துணிகரமாக, மட்டுமதிப்பின்றி, தூக்கியெறிந்து.
Cavally
n. அமெரிக்கக் கடல்மீன் வகை.
Cavalry
n. குதிரைப்படை, இவுளி மறவர்.
Cavatina
n. (இத்.) சிறு எளிய பாடல், இசைக்கருவியில் வாசிக்கப்படும் உணர்ச்சி வாய்ந்த மெல்லிசைப் மெட்டு.
Cave
n. குகை, கெவி, மலை முழைஞ்சு, அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு, (வி.) குழிவாக்கு, குகை தோண்டு, பள்ளம் பறி, குகையில் தங்கியிரு, அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Caveat
n. எச்சரிக்கை, முன்னறிவிப்பு, தடைக்கட்டு, (சட்.) முன்னெச்சரிப்புப் பதிவு, தற்காலத் தரப்பு நடவடிக்கை, மனுதாரருக்கு அறிவிக்காமல் மேல்நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்பின் முறைமன்றப் பதிவு.
Caveat emptor,
(ல.) (சட்.) 'வாங்குநர் கவனிக்க' என்ற அறிவிப்பு, சொத்து வாங்குபவர் செயலின் பொறுப்பு தனக்கின்மை அறிவிக்கும் எச்சரிக்கை.
Cave-bear
n. குகைகளில் காணப்படும் மிகப் பெரிய புதை படிவக் கரடிவகை.
Cave-dweller
n. குகை வாழ்நர், வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதர்.
Cave-earth
n. (மண்.) குகையின் அடித்தளங்களில் படிந்த நுண்ணயமான மண்.
Cave-man
n. குகை வாழ்நன், வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன், நாகரிகமற்றவன், (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Cavendish
n. மென்மைப் பதமாக்கி இனிப்பூட்டிப் பாளங்களாக அமைக்கப்பட்ட புகையிலை.
Cavern
n. அடிநிலக்குகை, நிலக்குடைவு, ஆழ்கிடங்கு, மலை முழைஞ்சு, (வி.) ஆழ்கிடங்கில் வை, குழிவாகத் தோண்டு.
Caverned
a. ஆழ்கெவிகள் நிரம்பிய, குகையில் வாழ்கிற, குகைபோன்ற.
Cavernulous
a. சிறு குழிவுகள் நிரம்பிய.
Caverous
a. குடைவான, ஆழ்கெவி போன்ற, பேழ் வாயுடைய, குழிகள் நிரம்பிய.
Caveson, cavesson
முரட்டுக் குதிரைகளை அடக்கிப் பழக்குவதற்குப் பயன்படும் மூக்குப்பட்டை வார்.
Caviar, caviare
உப்பிட்டு உலர்த்திய உயர்தர உணவு மீன்வகையின் கருச்சினை, பொதுநிலை மக்கள் அறிந்து நுகர இயலாத சீரிய பொருள்.
Cavicorn
n. (வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை, (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய.