English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cellarman
n. நிலவறைகாப்போன்.
Celled
a. உயிர்மங்களை உடைய, உயிர்மங்களில் அடங்கிய, உயிர்மங்களால் மூடப்பட்ட, கண்ணறைகள் நிரம்பிய.
Celliferous
a. உயிர்மங்களை உடைய, உயிர்மங்களை உண்டுபண்ணுகிற.
Cello, `cello
வாசிப்பவரின் முழங்கால்களுக்கிடையில் வைத்து வாசிக்கப்படும் நான்கு நரம்புள்ள இசைக்கருவிவகை.
Cellophane
n. மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள்போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர்.
Celluarity
n. கண்ணறைகளாலான நிலை.
Celluiferous
a. சிறு உயிர்மங்களுள்ள, சிறு கண்ணறைகளைத் தோற்றுவிக்கிற.
Cellular
a. தனி அறைகளைக்குரிய, உயிர்மங்களாலான, கண்ணவைகளாலான, சிறு குமிகளை உடைய, துளைகளையுடைய, இழைகள் செறிவாயிராத.
Cellulate
n. கண்ணறைகள் உள்ளதாக்கு, (பெ.) கண்ணறைகள் உள்ள.
Cellulitis
n. புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தின் அழற்சி.
Celluloid
n. கற்பூரத்தைக் கொண்டும் மரக்கூற்றுக் காலகையைக் கொண்டும் செய்யப்படும் தந்தம் போன்ற நெகிழ்பொருள், (பெ.) உயிரணுக்கள் போன்ற.
Cellulose
n. மரக்கூறு, செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள், (பெ.) கண்ணறைகளுள்ள.
Cellulosity
n. மரக்கூற்று இயல்பு.
Celsitude
n. உயர்வு, வீறுடைமை.
Celsius
a. நுற்றியல் வெப்பமானியை அமைத்த ஆண்டர்ஸ் செல்சியஸ் (1ஹ்01-44) என்பவருக்குரிய, நுற்றளவையாகப் பகுக்கப்பட்ட.
Celt
n. (தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கேடரி போன்ற கருவி.
Celt,(1) n.
(வர.) பண்டைப் பிரான்சிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த பழங்குடியினத்தவர், கெல்ட்டிய இனத்தவர்.
Celtic
n. இந்திய-செர்மானிய மொழிக் குடும்பத்தின் பிரிவு, கெல்ட்டிய இனத்தவரின் மொழி, (பெ.) கெல்ட்டிய இனத்தவருக்குரிய, கெல்ட்டிய இன மொழி சார்ந்த.
Celticize
v. கெல்ட்டிய மொழிப்படுத்து, கெல்ட்டிய இனத்தவர்களின் பழக்கவழக்கங்களை மேற்கொள்வி, கெல்ட்டிய இனமரபு தழுவி.