English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Celbrate
v. கொண்டாடு, வினைமுறை முற்றுவித்து நடத்து, பலரறிய நடைபெறுவி, பலர் அறியச்செய், புகழ், பாராட்டு, போற்று.
Celebrant
n. கொண்டாடுபவர், விழாவினை முதல்வர், விழாக்கோளாளர்.
Celebrated
n. புகழ்வாய்ந்த, பேர்பெற்ற.
Celebration
n. கொண்டாட்டம், விழா, புகழ்தல்.
Celebrator
n. கொண்டாடுபவர், விழாக்கேளாளர்.
Celeriac
n. கிழங்குள்ள தோட்டக் கீரைவகை.
Celerity
n. விரைவு, வேகம்.
Celery
n. சமைத்துத் தின்பதற்குரிய வௌதறிய தண்டுகளையுடைய செடிவகை.
Celeste
n. வானநீல வண்ணம், இசைப்பெட்டி வகையில் குரல் மடக்கு, (பெ.) வானநீல வண்ணமுள்ள.
Celestial
n. விண்ணவர், சீனக்காரர், (பெ.) வானத்துக்குரிய, விண்ணுலக வாசியான, விண்ணுலகம் சார்ந்த, தெய்விகன்ள, தெய்விக நலம் கொண்ட, தெய்விக அழகு வாய்ந்த.
Celibacy
n. மணமாகத நிலை, மனத்துறவு, மணங்கொள்ளா நோன்பு.
Celibatarian
n. மணமாகதவர், மணங்கொள்ளா நிலை ஆதரவாளர், (பெ.) மணமாகா நிலையை ஆதரிக்கிற.
Celibate
n. மணமாகாதவர், மணங்கொள்ளா நிலை ஆதரவாளர், (பெ.) மணமாகாத, மணஞ்செய்யா உறுதிக்கொண்ட.
Cell
n. சிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Cella
n. கோயிலின் உள்ளறை, கருமனை.
Cellar
n. நிலவறை, இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு, இன்தேறலின் சேமஅளவு, (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு.
Cellarage
n. நிலவறைத் தொகுதி, நிலவறைகளில் சேர்த்து வைப்பதற்கான கட்டணம்.
Cellarer
n. நிலவறையின் பொறுப்பு வகிப்பவர், துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
Cellaret
n. புட்டிகள் வைப்பதற்கான பெட்டி.
Cellar-flap
n. நிலவறைப் புழைக்கதவு.