English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dodge
n. அடியின் வீச்சிலிருந்து பக்கவாட்டில் விலகித தப்புதல், ஏய்ப்பு, காலம் கடத்தும் சூழ்ச்சி, சூழ்ச்சித்திறம், உபாயம், சொற்புரட்டு, மணி ஓசைப் பிறழ்ச்சி, (பே.வ) சொற்பொழி, சூழ்ச்சிப்பொறி, (வினை) வெட்டி விலகு, தட்டிக் கழி, போக்குக்காட்டு, தட்டுமறி, விளையாட்டுக்காட்டு, சூழ்ச்சிசெய்து ஏமாற்று, ஏய், காலங்கடத்து, சொற்புரட்டுச் செய், ஏய்த்துப் பசப்பு.
Dodger
n. ஏமாற்றுபவர், (பே. வ) நீர்த்திவலைகள் படாமல் காக்கும் கப்பற் பாலத் தட்டி.
Dodo
n. வான்கோழி அளவுள்ள பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய மரபழிந்துபோன மோரிஸ் தீவுகளுக்குரிய பெரிய பறவை.
Dodwn-beat
n. இசையியக்குநரது கோலின் கீழ்நோக்கிய இயக்கம், வலிந்த இயக்கம்.
Doe
n. பெண்மான், பெண்முயல்.
Doer
n. செய்பவர், வழக்கமாகச் செய்பவர், செயல்முதல்வர், செயல்முதல்.
Doe-skin
n. பெண்மான் தோல், நெருக்கமான நெய்யப்பட்ட வழவழப்பான கம்பளி ஆடை.
Doff
v. தொப்பி ஆடை முதலியவற்றைக் கழற்று, அகற்று.
Dog
n. நாய், காட்டுநாய், வேட்டைநாய், ஆண்நாய், பயனற்றவன், போக்கிரி, வீரன், வெறுப்புக்குரியவர், புறக்கணிப்புக்குரியவர், வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம், அழல்மீன், பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன், சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன், இடுக்கு குறடு, கட்டைக் கொளுவி, வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி, விறகுக்கட்டை அணைகோல், துப்பாக்கியின் குதிரை, மீன்வகை, (வினை) நாய்போல் விடாது தொடர், பற்றித்தொடர், தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி, நாய்களைக் கொண்டு வேட்டையாடு, இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
Dogatge
n. முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் கடியரசுகளின் தலைவர் பணிமனை.
Dogbane
n. நாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை.
Dog-bee
n. ஆண்தேனீ, சோம்பேறித்தேனி.
Dog-belt
n. பிடித்து இழுப்பதற்குரிய நாயின் இடுப்புப்பட்டைத் தோல்வார்.
Dogberry
-2 n. தற்பெருமை மிக்க நடுவயதினன்.
Dogberry,
-1 n. இலையுதிர்காலத்தில் தண்டும் இலையும் சிவப்பாக மாறகின்ற சிறமரவகை. ஊதா நிறப் பழவகை.
Dogcart
n. இருசக்கரமும் முதுகுக்கு முதுகான ஈரிருக்கையுமுடைய குதிரைவண்டி வகை.
Dog-collar
n. நாயின் கழுத்துப்பட்டை, கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை, பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை, பெண்டிர் கழுத்தணி.
Dogdays
n. pl. அழல்மீன் நாட்கள், கத்திரிக்காலம், அழல் மீன் கதிரவனோடு தோன்றி மறையும் மிகவெப்பமான காலப்பகுதி. (சூலை 3 முதல் ஆகஸ்டு 11 வரையுள்ள நாட்கள்.)
Doge
n. முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் குடியரசுகளின் தலைவர்.