English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dry-salter
n. மருந்துச்சரக்குகள், சாயங்கள், பதனச் சரக்குகள் ஆகியவற்றில் வாணிகம் செய்பவர்.
Dry-saltery
n. மருந்துச் சரக்குகள், சாயங்கள், பதனச்சரக்குகளின் வாணிகம், மருந்துச்சரக்குகள் சாயங்கள், பதனச்சரக்குகள் விற்கும்கடை.
Dry-shod
a. செருப்பு நயைத, கால்கள் நனையாத (வினையடை) செருப்பு நனையாமல்,கால்கள் நனையாமல்,
Dry-stone
a. காரையின்றிக் கல்லினால் கட்டப்பட்ட.
Dry-waller
n. காரையின்றிச் சுவர்கள் எழுப்புகிறவர்.
Dtente
n. நாடுகளிடையே நிலவிகின்ற மனக்கசப்பினை நீக்கம் முடிவமைதி.
Du,lcimer
பல்வேறு நீளமான தந்திகளுள்ள இசைக் கருவி வகை, யூதரின் பையிசைக்கருவி.
Dual
n. மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண், இருமை எண் சார்ந்த சொல், சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம், (பெயரிசை) இரண்டுக்குரிய, இரண்டுகொண்ட, இரு மடியான, இரண்டாகப் பகுபட்ட, இரட்டையான.
Dual;ity
n. இருமை, இரட்டைத்தன்மை, இரட்டையாயுள்ள நிலை.
Dualin
n. (வேதி) வாள்தூள் வெடியுப்பு முதலிய பொருள்கள் கலந்த ஆற்றல்மிக்க வெடிமருந்து வகை.
Dualism
n. இருமை, இருமை எண் வழக்காறு, (மெய்) இருபொருள்வாதம், துவைதம், நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு, பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு.
Dualist
n. இருபொருளுண்மைக் கோட்பாட்டாளர், இருபொருள்வாதி, துவைதி.
Dualistic
a. இரண்டு கொண்ட (மெய்) இருபொருள் வாத்ததுக்குரிய.
Dub
-1 v. ஆற்றின் சிறுமடு, குட்டை, சேற்றுக்குழி, சேறு.
Dub
-2 v. வாளின் மொட்டைப்பக்கத்தால் தோளில் தட்டும் வினைமுறை மூலம் முற்கால வழக்கப்படி வீரப்பெருந்தகை என்ற பட்டஞ் சூட்டு, புது நன்பமிதிப்பு நயம்படச் சாட்டுப் பெயரிடிட்டழை, வாய்ச்சியினால் இழைத்து மென்னயப்படுத்து, கத்தரித்து ஒழுங்குசெய், புள்ளினங்களின் சூட்டும்
Dub
-3 v. திரைப்படத்திற்கு வேறு மொழியிற் புதிய, ஒலிப்பதிவை இணை, இயக்கத்திரைப்படத்துடன் ஒலி இசைப் பதிவு இணை.
Dubbing
n. வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல், வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை, தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
Dubiety
n. ஐயப்பாட்டுணர்வு, சந்தேகத்துக்குரிய செய்தி.
Dubious
a. ஐயுறவுக்குரிய, இரண்டகமான விளைவுக்குரிய, சந்தேகம் கொள்ளுவதற்குரிய, ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற, ஐயுறுகிற, தயங்குகிற, ஊசலாட்டமான, நம்பகமற்ற, நம்பும் தகுதியில்லாத, தௌதவற்ற, இனந்தெரியாத, இரண்டகமா, புதிரான.
Dubitation
n. ஐயம், தயக்கம்.