English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Decimal
n. பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான
Decimal fraction
பதின்கூற்றுப் பின்னம்.
Decimal notation
பதின்மான இலக்கம்.
Decimal systemr
பதின்மான முறை.
Decimalism
n. பதின்மான முறை வழக்காறு, பதின் கூற்று முறை ஆதரவு.
Decimalize
v. பதின்மான முறையாக்கு, பதின்கூறாக்கு.
Decimate
v. பத்தில் ஒரு பங்கு அப்ற்று, பத்துப்பேரில் ஒருவனைக் கொலைசெய்து தண்டி, பெரும்பகுதியைக் கொன்றழி, பெரும்பகுதி அழிவு செய், பேரளவில் குறை.
Decimetre
n. பிரஞ்சு மெட்ரிக் முறையில் நீட்டல் அளவைக் கூறு, கோலின் பத்தில் ஒன்று.
Decimo-sexto
n. பதினாறுமடி, பதினாறாக மடிக்கப்பட்ட தாள், பதினாறு மடிப்பு, பதினாறு மடிப்பாக உருவான ஏடு.
Decimus
n. பத்தாமவர், பத்தாவது ஆள்.
Decipher
n. மறைகுறியெழுத்துழூலத்தின் பொருள் விளக்கம், (வினை) மறைகுறியீட்டின் குறிப்புக் கண்டுணர், மறை குறியீட்டின் குறிப்புக் கண்டு பொது எழுத்து முறைப்பட எடுத்தெழுது முறைகண்டுணர், அடையாளம் அறி, பொருள் கண்டுபிடி.
Decision
n. தீர்மானித்தல், முடிவு, தீர்மானம், தீர்வு, தீர்ப்பு, உறுதிப்பாடு, உறுதிப்பாட்டுப் பண்பு, மன உறுதி.
Decisive,decisory
தீர்மானிக்கும் ஆற்றலுள்ள, முடிவான, தீர்வான, அறுதி செய்து முடிக்கிற, இறுதியான, உறுதியான, ஐயமற்ற, தௌதவான.
Decivilize
v. நாகரிகப்பண்பகற்று, பண்பாட்டு நிலையினின்று தாழ்த்து.
Deck
n. கப்பல் தளம், கப்பலில் பக்கத்துக்குப் பக்கமாகச் சென்று தளமாகப் பயன்படும் தட்டடுக்கு, கப்பல் தள மேடை, மேல் கட்டு, பேருந்துவில் தள அடுக்கு. சீட்டாட்ட வகையில் சீட்டுக்கட்டு, சீட்டாட்ட வகையில் எடுக்ககாது கிடக்கும் கட்டு, (வினை) அழகு செய், ஒப்பனை செய், ஆடை அணி பூட்டு, மேற்கவிந்து மூடு கப்பலுக்கு மேல் தளம் அமை, தளமேடைமீது ஒழுங்குபட அடுக்கு.
Deck-bridge
n. சாலை செல்லும் மேற்பகுதியுடைய பாலம்.
Deck-cargo
n. கப்பலில் மேல்தளத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படும் சரக்க.
Deck-chair
n. எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய நீள் மடக்கு நாற்காலி.
Decker
n. அழகு செய்பவர், ஒப்பனைப் பொருள், தள அடுக்கு கொண்ட கப்பல் அல்லது ஊர்தி.
Deck-hand
n. கப்பல்தளத் தொழிலாளி, பொதுநிலைக் கடலோடி.