English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Decency
n. தகைமை, நடைமுறைத் தகுதி, நாகரிக நுண்ணயக் கூறு, சுவை நலம், பண்பு நலம், இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு, மதிப்புடைமை, ஒப்புரவுடைமை,
Decennary
n. பத்தாண்டுகள் கொண்ட காலக்கூறு (பெயரிடை) பத்தாண்டுக் காலத்துக்குரிய.
Decenniad
n. பத்தாண்டுக் காலம்.
Decennial
a. பத்தாண்டுகள் கொண்ட, பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழ்கிற.
Decent
a. ஏற்பபுடைய, பண்பார்ந்த, மட்டான, நடுத்தரமான, வரம்பு மீறாத. பாங்குடைய.
Decentralize
v. நடுவாட்சி வலுத்தளர்த்து, ஆட்சி உரிமை பன்முகப்படுத்து, கிளையாட்சி வலுப்படுத்து.
Deceptiable
a. ஏன்ற்றப்படத்தக்க, வஞ்சிக்கப்படக்கூடிய.
Deception
n. ஏன்ற்றுதல், மோசடி, வஞசனை, சூழ்ச்சிப் பொறி, தந்திரம், ஏன்ற்றப்பட்ட நிலை, ஏன்ற்றுமுறை, ஏன்ற்றப்பட்டதால் விளையும் தவறு.
Deceptive
a. ஏன்ற்றும் இயல்புடைய, மாயமான, ஏன்ற்றக்கூடிய, மயங்கவைக்கிற.
Deceptory
a. ஏன்ற்றும் இயல்புடைய.
Dechristianize
v. கிறித்தவ சமயத்தினின்றும் மாற்று, கிறித்தவ சமயப் பண்பைக் குறையச் செய்.
Decidable
a. தீர்மானிக்கப்படத்தக்க, அறுதியிடக்கூடிய,.
Decide
v. முடிவு செய், தீர்மானி, உறுதிகொள், அறுதி இடு, முடிவுக்கு வா, தீர்ப்பளி.
Decided
a. உறுதியான, தௌதவான, ஐயத்துக்கு இடமற்ற, வரையறைப்பட்ட, தயக்கத்துக்கு இடம் தராத, மறுகேள்வியற்ற, உறுதிப்பாடான.
Decider
n. உறுதி செய்பவர், உறுதி செய்வது, பந்தயத்தில் தயக்க நிலை முறித்து ஆட்டம் மீட்டும் தொடங்கப்படும் நிலை.
Decidua
n. குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வௌதப்படும் மெல்லிய கருச்சவ்வு.
Deciduous
a. குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய, தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய, எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற, பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க, கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய, நிலையற்ற, மாறுபல்க்கூடிய.
Decigramme
n. பிரஞ்சு மெட்ரிக் முறையில் எடையளவைக் கூறு கிராமில் பத்தில் ஒரு கூறு.
Decilitre
n. பிரஞ்சு மெட்ரிக் முறையில் முகத்தலளவைக் கூறு, விட்டரில் பத்தில் ஒன்று.
Decillion
n. பத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு, ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண், அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.