English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Debtee
n. கல்ன் கொடுப்பவர்.
Debtor
n. கல்ன் வாங்குபவர், வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர், கடன்பட்டவா.
Debunk
v. உவ்ர்ச்சித்திரை கிழி, பாசாங்கை அம்பலப்படுத்து, மேற்பூச்சகற்று, போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வௌதப்பத்து, செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Debus
v. உந்து வண்டியிலிருந்து இறங்கு, உந்தகத்திலிருந்து ஆட்களை இறக்குவி, பேருந்துவிலிருந்து சரக்குகளை இறக்கு.
Debut
n. அரங்கேற்றம், முதல்-முயற்சி பொதுவிடத்தில் முதன்முறையாகத் தோற்றமளித்தல்.
Debutant
n. அரங்கேறுபவன், முதன் முறையாகத் தோற்றம் அளிப்பவன்.
Decachord
n. பத்து நரம்புகளுள்ள பழங்கால இசைக்கருவி.
Decad, decade
பத்து, பத்தான தொகுதி, பதிகம், பத்தாண்டு.
Decadence, decadency
நிலைதளர்வு, நலிவு, சோர்வுவ, தரங்கெட்டழிந்த நிலை, கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம், பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
Decadent
n. இழிபுற்றவர், தரங்கெட்டவர், சீர்கேடுற்றவர், இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர், கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர், பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர், (வினை) நிலையிழிபுற்ற, தரங்கெட்ட, சீர்கேடுற்ற, நலிவுற்ற, சோர்ந்த, அழிகிற, அழுகிய, உடலுரமற்ற, மனஉரமிழந்த, மறைகுறி மரபு சார்ந்த.
Decagon
n. பதின் கோணம், பத்துக் கோணங்களும் பத்துப் பக்கங்களும் கொண்ட நேர்கட்ட வடிவம்.
Decalcify
v. எலும்பிலிருந்து சுண்ணத்தை நீக்கு, சுண்ணாம்புச் சத்தினைப் போக்கு.
Decalogist
n. பத்துக் கட்டளைகளை விளக்கிக் கூறுபஹ்ர்.
Decalogue
n. பத்துக் கட்டளை.
Decameron
n. பத்து நாட்களில் கூறப்பட்டதாகக் கருதப்படும் பொக்காசியோ என்ற இத்தாலி எழுத்தாளர் எழுதிய நுறு கதைகள்.
Decamp
v. திருட்டுத்தனமாகச் சென்றுவிடு, திடீரென்று ஓடிவிடு, தங்கல் கலைத்து விடு கூட்டுக் கலைந்து செல்.
Decanal
a. சமய வட்டத் துணைத்தலைவரைச் சார்ந்த, வட்டத் துணைத்தலைவருடைய ஆட்சி வரம்பைச் சார்ந்த, வட்டத்துணைத்தலைவர் திருக்கோயிலில் அமரும் தென் சிறைப் பகுதி சார்ந்த.
Decant
v. தௌதய வைத்து இறு, வடித்திறு, கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று, மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று.
Decanter
n. வடிகலம், மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி.