English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Decoy
n. பொறிக்குள் சிக்கவைக்க உதவும் பொருள், காட்டுத்தாராக்களைப் பழகிய தாராக்களின் துணையால் செலுத்திச் சிக்கவைக்கும் வலை, புட்குலங்களை அகப்படுத்த உடந்தையாயிருக்கும் பறவை, பார்வை மிருப்ம், ஏமாற்றுக்காரனுக்கு உடந்தையாய் இருப்பவர், உள்ளாள், கையாள், தூண்டிற்பொருள், மருட்டுக்கருவி, (வினை) வசப்படுத்திப்பிடி, பொறியுள் ஏய்த்துச்செலுத்து, பழக்கிய பறவையுதவியால் காட்டுத்தாராவை வலையுட்படுத்து மருட்டிச் சிக்கவை.
Decoy-duck
n. காட்டுத்தாராக்களை மஸ்க்கி வலைக்குள் விழவைப்பதற்காகப் பழக்கப்படுத்திப் பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் காட்டுத்தாரா, பிடிக்குள் பிறரை வீழ்த்துவதற்காகப் பயன் படுத்தப்படுபவர்.
Decrassify
v. அல்ர்த்தியைக் குறை, மடமையைத் தளர்த்து.
Decrease
-1 n. குறைபடுதல், குறைபாடு, குறைவு, நட்டம், இழப்பு.
Decrease,
-2 v. குறை, குறைவாக்கு, குறைவுறு.
Decree
n. ஆணை, கட்டளை, ஆணைப்பத்திரம், சட்டம், நடுவர் முடிவு, தீர்ப்பு, கடல்துறை-மணவிலக்கு முதலியவை சார்ந்த வழக்குமன்றங்களின் முடிவு, (வினை) ஆணை பிறப்பி, கட்டளையிடு, விதிசெய், முடிவுசெய், தீர்ப்பளி.
Decrement
n. குறைவு, குறைமானம், இழப்பவு, சேதாரம்.
Decrepit
a. சிதைந்துபோன, முதுமைத் தளர்ச்சியுற்ற, இறுதிக் கட்டத்திலுள்ள.
Decrepitate
v. உப்பு வகைகளில் பற்றியவிடத்தில் சூட்டினால் வெடித்துச் சிதறு, உப்பு அல்லது கனிப்பொருள்கள் வகையில் சுட்டு நீறாக்கு, வெந்து நீறாகு.
Decrepituade
n. முதுமைத். தளர்ச்சி,
Decrescent
a. தேய்கிற, படிப்படியாகக் குறைகிற.
Decretal
n. போப்பாண்டவரின் கட்டளை.
Decretals
n. pl. போப்பாண்டவரின் கட்டளைத் தொகுப்பேடு.
Decry
v. இகழ்ந்துரை, குறைகூறு, கண்டி.
Decuman
n. பேரலை, (வினை) மிகப்பெரிய, அலைகள் வகையில் தலைமையான.
Decumbent
a. படுத்த நிலையிலுள்ள,(வில.,தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற, (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற, (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற.
Decumence, decumbency
n. கிடக்கும் நிலை.
Decuple
n. பத்து மடங்கு, (பெயரடை) பதின்மடங்கான, (வினை) பத்து மடங்காக்கு.
Decuria
n. பதின்மர் குழு, பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோ ர் கொண்ட குழு.
Decussate
a. குறுக்குமறுக்கான, ஒன்றையொன்று வெட்டுகிற, சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய, (தாவ) குறுக்குமறுக்கான, எதிரிணை இலைகள் கொண்ட, (வினை) குறுக்குக்கோடிடு, குறுக்குவெட்டாக வெட்டு.