English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Diabolism
n. சூனியம், பேய்க்குணம், பேய்த்தனம், பேய்த்தனமான நடவடிக்கை, பேய் வழிபாடு, பேய் நம்பிக்கை.
Diabolize
v. பேயாக்கு, பேயெனப் புனை.
Diabolo
n. இருதலைப் பம்பர விளையாட்டு, இருதலைகளையுடைய பம்பரமொன்றையும் இருகுச்சிகள் இணைத்த கயிற்றையும் கொண்டு ஆடும் விளையாட்டு வகை.
Diachylon, diachylum
ஈயச்சத்ததுக் கலந்த பசைப் பற்றொட்டு.
Diaconal
a. கிறிஸ்துவக் கோயில் குருவைச் சார்ந்த.
Diaconate
n. கிறித்தவக் கோயில் குருவின் பதவி, கிறித்தவக் கோயில் குருமார் தொகுதி.
Diacritic, diacritical
a. வேறுபிரித்தறிய உதவுகிற, எழுத்துக்களின் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிற.
Diactinic
a. வேதியியல் திறமுடைய கதிடிர்கள் ஊடுருவிச் செல்கிற.
Diadelphous
a. இவிழை முடியுள்ள, பூவிழைகள் இருமுடிகளாய் இணைந்துள்ள.
Diadem
n. மணிமுடி, மகுடம், முடியின் கவிவு, தழைமுடி, மலர்க்கண்ணி, முடிமாலை, ஆட்சித்தலைமை உரிமை.
Diaeresis
n. இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
Diagnosis
n. நோய் ஆய்வுறுதி, நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல், நோய் அறுதி விளக்கப்பதிவு, ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
Diagnostic
n. நோய்க்குறி, நோயின் புற அடையாளம், (பெயரடை) வேறுபரத்திக் காண உதவுகிற, நோய்க்கமூலம் நோயறுதி செய்கிற.
Diagonal
n. மூலைவிடடக் கோடு, வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை, தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம், சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம், சாய்கரை ஆடை, (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற, வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற, மூலைவாட்டான, சாய்வான.
Diagram
n. விளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
Diagraph
n. சித்திரப்படிவுக் கருவி.
Dial
n. கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி, மணிப்பொறியின் முப்ப்பு, அளவை சுட்டுமுகப்பு, சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி, தொலைபேசியின் எண்வட்டு, (வினை) அளவையிட்டுணர், அளவை மதிப்புக்காட்டு, தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு, தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
Dialect
n. பேச்சுவழக்கு வகை, திசை வழக்க, குழு வழக்கு, தனி வழக்கு, வழக்கத்துக்கு மாறுபட்ட தனிமுறைப்பேச்சு வகை, கிளைமொழி.
Dialectic
-1 n. புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.