English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
E-mail address
மின்னஞ்சல் முகவரி
Embed
v. சூழ்ந்தணைத்துக்கொள், பதித்துவை, கிடத்து.
Embedded
a. பதிக்கப்பெற்ற.
Embellish
v. ஒப்பனைசெய், அழகுபடுத்து, நுணுக்க நயமுடையதாக்கு, கற்பனை இணைத்துச் சுவைபெருக்கு.
Embellishment
n. அழகுடையதாக்கல், நுண்நய ஒப்பனை, அணி, அணிகலன்.
Ember
n. தணல், கங்கு, கணப்பு, கொதி சாம்பல், வெந்தழல் நீறு.
Ember-days
n.pl. நோன்பு வழிபாட்டுக்குரிய கிறித்தவப் பெருநாட்கள்.
Ember-goose
n. வடமாகடற்பகுதிக்குரிய பெரிய நீர்மூழ்கிப் புள்வகை.
Embers
n. pl. கணப்பு, கங்குகனல், எரிதழற்சாம்பல்.
Ember-week
n. உண்ணாநோன்பிலிருந்து வழிபாடு மேற்கொள்ளப்படும் மூன்று கிறித்தவப் பெருநாட்கள் வருகிற வாரம்.
Embezzle
v. பணத்தைத் தகாத முறையில் கையாடு, பொதுப்பணத்தைத் தனி நலனுக்குப் பயன்படுத்தி மோசடியாகக் கையாடல்.
Embezzlelment
n. ஒப்புவிக்கப்பட்ட உடைமையை மோசடியாகக் கையாடல்.
Embitter
v. புண்படுத்து, கசப்பூட்டு, பகைமையுண்டு பண்ணு.
Embittered
a. மனக்கசப்புற்ற, புண்பட்ட, உளமுறிவுற்ற, வாழ்வில் வெறுப்புற்ற, நலங்களில் நம்பிக்கையிழந்த.
Emblazon
v. (கட்.) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு, மரபுவழிச்சின்னங்கள் தீட்டு, பகட்டாக வரைந்துகாட்டு, பறைசாற்று, புகழ் பரப்பு, கொண்டாடு, பாராட்டு.
Emblazonment
n. (கட்.) மரபுரிமையான உருவங்களால் ஒப்பனை செய்தல், புகழ்ந்து பேசுதல்.
Emblazonry
n. (கட்) வீரமரபுச்சின்னங்கள் தீட்டுங்கலை கேடயத்திலுள்ள வீரமரபுச் சின்னங்கள்.
Emblem
n. தனிக்குறி, மரபுச்சின்னம், சிறப்பு அடையாளம், மாதிரியுரு, வகைமாதிரி, உருமாதிரி, பண்புக்குரிய சின்னமாகக் கருதத்தக்கவர், பண்புக்குறியீடாகக் கருதத்தக்கது, மரபுரிமைச் சின்னம், (வினை) சின்னமாகக் குறித்துக்காட்டு அடையாளமாயமை.
Emblematic, emblematical
a. சின்னங்களுக்குரிய, சின்னங்களைக்கொண்ட, சின்னமாயமைந்த, உருப்படுத்திக்காட்டுகிற, வகைமாதிரியான, பண்புருச்சின்னமான.