English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Embrocate
v. மருந்து நீர் பூசித் தேய், மருந்து நீர்மத்தால் கழுவு.
Embrocation
n. தடவு மருந்து, நோயுற்ற உறுப்பின்மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம், பூசித் தேய்த்தல்.
Embroider
v. தையல் பூவேலைசெய், பின்னல் ஒப்பனை வேலை செய், கற்பனைச் செய்திகளைக்கொண்டு கதை முதலிய வற்றை அழுகுபடுத்து.
Embroidery
பூத்தையல், தையல் வேலைப்பாடு
Embroidery
n. பூத்தையல்வேலை, சித்திரத் துன்னல் வேலைப்பாடு, சித்திரப்பின்னல் வேலைப்பாடுடைய துணிவகை, பல்வகை வேறுபாடுடைய ஒப்பனை வேலைப்பாடு, நுணுக்க நய வேலைப்பாடு, செயற்கை ஒப்பனை, மிகுபுனைவுக்கலப்பு, இட்டுக்கட்டு விரிவு, கற்பனை நுணுக்கம்.
Embroil
v. குழப்பத்தில் சிக்கவை, சச்சரவில் சிக்கச்செய், மனக்குழப்பமூட்டு, மலைப்பு உண்டுபண்ணு.
Embroilment
n. குழப்பம்ம, சிக்கல், கலவரம்.
Embrown
v. தவிட்டுநிறமாக்கு, மங்கலாக்கு, இருண்டதோற்றமளி.
Embroynic
a. முதிரா நிலைதயில் உள்ள, தொடக்க நிலையிலுள்ள, முதிராநிலைக்குரிய, முதிராநிலைத் தொடர்பான.
Embryo
n. கருமுளை, முட்டைக்கருவுயிர், முதிர்வுறாக்கருவுருவியிர், தொடக்கநிலை, (பெ.) தொடக்கநிலையிலுள்ள, முதிராத.
Embryoctony
n. (மரு.) கருவழிவு, கருவிலேயே உயிரழிவுறுதல்.
Embryogenesis
n. கரு உருவாதல், கருவாக்கம்.
Embryology
n. கருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல்.
Embryotomy
n. (மரு.) கருவுயிர்க்கூறுபாடு, வயிற்றினும் கருவை வெட்டியெடுத்தல்.
Embus
v. படைத்துறை வீரர்களை சரக்குகளையோ பேருந்து வண்டியில் ஏற்று, பேருந்து வண்டியில் ஏறு.
Embusque
n. (விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர், உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
Emend
v. மூலபாடத்திலுள்ள குற்றங்களை, குறைபாடுகளை அகற்று, திருத்து, சீர்படுத்து.
Emendation
n. பிழையினைக் களைதல், பாடதிருத்தம்.
Emendator
n. சுவடிகளிற் பிழைகள் திருத்துபவர், சீர்ப்படுத்துபவர்.
Emendatory
n. செப்பனிடுகிற, திருத்தஞ் செய்கிற.