English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Emblematist
n. சின்னங்களை அமைப்பவர், அடையாளச்சின்னங்களைப் புனைந்துருவாக்குபவர், பண்புருவகம் தீட்டுபவர்.
Emblematize
v. சின்னமாயிரு, அடையாளமாக அமை, குறித்துக்காட்டு, அடையாளச் சின்னமூலம் உருமாதிரிகாட்டு.
Embodiment
n. உடம்பொடு தோன்றுதல், மூர்த்தீகரிப்பு, உடம்பொடு கூடிய உருவம், பிழம்புருவம், கருத்துருவம், கருத்தின் புறவடிவம், கண்கூடான உருவம், பண்புருவம், பண்புகளை அங்கமாகக் கொண்ட உரு, திரளுரு.
Embody
v. உடலுருக்கொடு, மூர்த்தீகரி, அகப்பண்புகளுக்குப் புறவுருவம் கொடு, பிழம்புருவம் கொடு, கொள்கை கோட்பாடுகளைச் செயலுருப்படுத்து, கருத்தின் புறவுருவாகத்திகழ், பயனுருவாக இலங்கு, உடம்பெடு, உடலொடு தோன்று, உள்ளடக்கு, அங்கமாகக் கொள்.
Embog
v. சேற்றில் அமிழ்த்து, அளறில் சிக்கவை, மூழ்கிச் செய், அழுந்துவி.
Embolden
v. துணிவளி, திடங்கொள்ளச்செய், ஊக்கு.
Embolism
n. (மரு.) குருதிக்குழாயடைப்பு, பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக்குழாயில் குருதிக்கட்டி வழியடைத்தல்.
Embonpoint
n. (பிர.) கொம்மை, கொங்கை, (பெ.) கொழுகொழுப்பான.
Embosom
v. தழுவு, அணை, அன்புடன் போற்று, நெஞ்சில் பதியவை, சூழ்ந்திரு, வளைத்தங்கொள்.
Embosomed
a. சூழப்பெற்ற, இடைநடுவே அமைந்த.
Emboss
v. புடைப்புருப்படச்செதுக்கு, மேல்வந்து முனைப்பாயிருக்கச்செய், துருத்திநிற்கச் செய், உந்துவி.
Embossment
n. முகிழ் முனைப்பு, புடைப்பகழ்வுச் சித்திர வேலைப்பாடு.
Embouchure
n. (பிர.) ஆற்றுவாய், பள்ளத்தாக்கின் வாயில், துளை இசைக்கருவியை வாயுடன் இணைக்கும் உறுப்பு, துளை இசைக்கருவி உறுப்புடன் வாயிணைப்பு.
Embowel
v. குடலெடு, குல்ர்பிடுங்கு, உள்வைத்து மூடு.
Embower
v. கொடிவீட்டில் இருத்து, நிழலில் வை, புகலிடமளி, புகலிடங்கொள்.
Embrace
n. தழுவல், ஆர்வ அணைப்பு, புணர்ச்சி, இணைவிழைச்சு, (வினை) தழுவு, கையால் அணை, மார்போடு சேர்த்துக்கொள், ஆர்வமாக ஏற்றுக்கொள், விரும்பி வரவேற்றுக்கொள், மேற்கொள், பின்பற்று,. உள்ளடக்கமாகக்கொள்.
Embraces
n. pl. புணர்ச்சி, இணைவிழைச்சு.
Embranchment
n. ஆறு முதலிய வற்றின் வகையில் கிளைததல், கிளைகளாகப் பிரிந்துசெல்லல்.
Embrangle
v. சிக்கவை, குழப்பு.
Embrasure, embrazure
மதிலிடைப்புழை, பீரங்கிச்சாலகம், ஏப்புழைம, கதவுப்புறச்சுவரின் உள்வாய்ச்சரிவு, பலகணிப்புற மதிலின் உட்புறச் சாய்வு.