English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Endow
v. சீதனமாக வழங்கு, உரிமையாக விட்டுச்செல், உரித்தாக்கு, நிலவர உடைமையாக வழங்கு, மானியமாக அளி, நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி, பரிசளி, அறக்கொடை வழங்கு, இயல்புத்திறமாக விட்டுச்செல், இயற்பண்பாக அமைவி.
Endowment
n. உரிமை வழங்குதல், மானிய அளிப்பு, மானியம், அறக்கொடை.
Endue
v. ஆடை முதலியன அணிவி, ஆடை முதலியன அணி, பண்பு முதலிய வற்றின் வளமளி.
Endurance
n. பொறை, துன்பம் தாங்கும் ஆற்றல், உழைப்பாற்றல், நீடித்துழைக்கும் திறம்.
Endure
v. நீடித்திரு, நிலைத்திரு, நீடித்துழை, தாங்கு, பொறு, துன்பத்தை ஏற்றமைவுறு, பணிவுடன் மேற்கொள்ளு.
Endways, endwise
விளிம்பு முனைப்பாக, முனை மேலாக, ஓரம் முன்னாக, விளிம்புடன் விளிம்பாக.
Enema
n. குதவாய் வழியே குடல் கழுவுதல், குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவி, நீரேற்றி.
Enemy
n. எதிரி, பகை, எதிர்ப்புப்படையினன், பகைமை நாட்டினன், எதிர்ப்புப்படை அல்லது கப்பல், (பெ.) எதிரியைச் சார்ந்த, எதிரியினுடைய.
Energetic
a. ஊக்கமுள்ள, ஆற்றலுடைய, வலுவான, வலிமையுடன் செயலாற்றுகின்ற, விடாமுயற்சியோடு கூடிய, சுறுசுறுப்புள்ள.
Energetics
n.pl. ஆற்றல் ஆய்வியல் துறை.
Energize
v. ஊக்கமூட்டு, முனைப்பாக்கு, தீவிரப்படுத்து, விரைசெயற்படுத்து, சுறுசுறுப்பாக்கு, புதுவலுப் பெறு, விரை.
Energumen
n. பேய் பிடித்தவர், வெறியர், மீதார்வலர்.
Energy
n. ஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம்.
Enervate
-1 a. ஊக்கம் குறைந்த, உரமிழந்த.
Enervate
-2 v. வலுவிழக்கச்செய், நலிவுறுவி.
Enface
v. விலைப்பட்டி முகப்புவரி எழுது, முகப்புவரி பொறி, முகப்பு வரி அச்சிடு, முகப்புவரி நிரப்பு.
Enfamille
adv. (பிர.) தன்மனையில், குடும்பத்திடையே.
Enfant terrible
n. (பிர.) அருவருப்பான கேள்விகளைக் கேட்கும் குழந்தை, கேட்டதைத் திருப்பிச் சொல்லும் குழந்தை.
Enfeeble
v. தளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு.
Enfeoff
v. மானியம் அளி, அளி, ஒப்படை.