English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
English
-1 n. ஆங்கில மொழி, அச்சுரு அளவைவகை, (பெ.) இங்கிலாந்து நாட்டுக்குரிய, ஆங்கில மக்களுக்குரிய, ஆங்கில மரபு சார்ந்த.
English
-2 v. ஆங்கில மொழிப்படுத்து, ஆங்கிலத்தில் மொழி பெயர், ஆங்கிலமாக்கு.
Engorge
v. பேராவலுடன் விழுங்கு, திணி, செறிவி, குருதி செறிவி.
Engraft
v. ஒட்டினம் உண்பண்ணு, முதிர்கிளையுல்ன் இளங்கன்றிணை, இரண்டு இனங்களை ஒட்டி இணை, சேர்த்திணை, ஒன்றுபட இணை, உள்ளத்திற் பண்பு ஊன்றுவி.
Engrail
v. ஓரத்திற் பற்களாக வெட்டு, வாள்போல் பற்களமைந்த தோற்றம் கொடு.
Engrain
v. (வண்ணச்சாயம் முதலியன) ஆழமாகப் பதியும் படி செய்வி.
Engrained
a. உள்ளுறித்தோய்ந்த, உள்ளுன்றிய, செறிந்த.
Engrave
v. செதுக்கு, உட்செதுக்கு வேலைப்பாட்டால் ஒப்பனை செய், செதுக்குருவம் தீட்டு, அச்சுக்குரிய உருவரைப்பாளம் செதுக்கு, மனத்தில் நன்கு பதியவை.
Engraving
n. செதுக்கு வேலைப்பாடு செய்தல், செதுக்கு வரிவேலை செய்யப்பட்ட அச்சுப்பாளத்தின்மூலம் அச்சிடப்பட்ட படம்.
Engross
v. பத்திரமுதலிய வற்றைப் பெரிய எழுத்தில் எழுது, சட்ட உருவில் எடுத்துக்குறிப்பிடு, விற்பனையில் தனி முழு உரிமை ஏற்படும் படி இருப்பு முழுவதையும் வாங்கி விடு, உரையாடலை முற்றிலும் தன்வயமாக்கு, கவனத்தை முழுவதும் சுவர், நேரத்தை முழுவதும் தனதாக்கிக்கொள்.
Engulf
v. விழுங்கு, வளைந்து சூழ், உள் அமிழ்த்திக்கொள், விழுங்குவி, அமிழ்த்துவி.
Enhance
v. உயர்த்து, விலை மிகுதிப்படுத்து, மேம்படுத்து, உயர்வுபடுத்து, மதிப்பேற்று, மிகைபடுத்து, கூடுதலாக்கு, பெருக்கு, முனைப்பாக்கு, மிகுதிப்படு, கூடு, விலையுயர்வுறு.
Eniac
n. வெற்றிடம்-வளி-மின்கடவாப் பொருள் ஆகிய வற்றில் மின்வலி இயக்கநிலைகளைக் கணிக்கும் அமெரிக்க அளவைப்பொறி.
Enigma
n. புதிர், ஊகிக்க வேண்டிய மறைபொருளுடைய தொடர், விடுகதை, பொருள் விளங்காதது, புரியாதது, புரியமுடியாதவர், விசித்திரப் பண்புடையவர்.
Enisle
v. (செய்.) தீவாக்கு, தீவில் வை, தனிப்படுத்து, துண்டி.
Enjambment
n. யாப்பியலில் ஈரடித்தொடாபுநிலைச் செய்யுளில் இரண்டாம் அடி கடந்தும் வாக்கியம் நீண்டு செல்லுதல்.
Enjoin
v. கட்டளையிடு, ஆணை விதி, வரையறை செய், கட்டுப்படுத்து, வற்புறுத்திக்கூறு, அழுத்தமாக வேண்டிக்கொள்.
Enjoy
v. துய்த்து மகிழ், மகிழ்வுடன் நுகர், கண்டுமகிழ், கேட்டு மகிழ், உணர்ந்து மகிழ்.
Enkindle
v. நெருப்பு அக்ஷ்ண்றெழுவி, போர்கிளர்ந்தெழுவி, உணர்ச்சியைத் தூண்டியெழச்செய், உணர்வு கொளுத்து.
Enlace
v. சூழ், சூழ்ந்திறுக்கு, வரிந்து சுற்று, சுற்றிப்பிணை, முறுகு, அணை, தழுவு, சிக்கவை, பின்னு, வலைபடர்வி, பின்னல் வேலைப்பாடு மேவுவி.