English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Escape, n.
தப்பியோடுதல், தப்பிப்பிழைத்தல், இட்ர்பிழைப்பு, மறைந்தோடுதல், தப்பியோடும் வகைதுறை, தப்பியோடியநிலை, கைநழுவிச் செல்லல், நழுவல், வௌதயேற்றம், ஒழுக்க, கசிவு, ஒழுக்கு குழாய், கசிபுழை, வௌதப்படுவழி, வெடித்து வௌதயேறல், நெறிபிறழ்ச்சி, தற்செயலான தவறு, சிறு குற்றம், மன்னிக்கத்தக்க வழு, குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை, நேரம் போக்கும் முறை, பணிமாற்று ஈடுபாடு, இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோ டும் போக்கு, தப்பியோடியஹ்ர், தப்பியோடியது, காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வௌதப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற, ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த, (வினை) தப்பிச்செயல், பிழைத்தோடு, இடரிலிருந்து தப்பிப்பிழை, தண்டனைக்கு விலகிச்செய், சிறையிலிருந்து தப்பியோடு, மறைந்தோடு, கட்டிலிருந்து வௌதயேறு, பாதுகாப்புடன் வௌதயே செல், தட்டிக்கழி, தவிர், அகப்படாமல் தப்பு, நழுவி-செல், நழுவு, கசி, ஒழுகு, வௌதச்செல்.
Escapee
n. தப்பி ஓடுபவர்.
Escapement
n. போக்கிடம், வௌதச்செல் வழி, மணிப்பொறியில் சமநிலைப்பொறிக்கும் இயக்கும் சக்திக்கும் இடையே தொடர்புசெய்து ஒழுங்குபடுத்தும் அமைவு.
Escarp
n. அரணைச் சூழ்ந்துள்ள செங்குத்தான திடீர்ச்சரிவுக்கரை, அரணடுத்த அகழின் கரை, செங்குத்தான சரிவு, (வினை) செங்குத்தான திடீர்ச்சரிவு உருவாக்கு.
Escarpment
n. நேர்ச்செங்குத்தான மலைச்சரிவு, அரணில் நேர்ச்செங்குத்தான கரைச்சரிவு, அகழின் கோட்டைப்புறக்கரை.
Eschalot
n. வௌளைப்பூடு மணமுடைய வெங்காய வகை.
Eschatology
n. அம்மை மறுமைக் கோட்பாடுட, சாவு இறுதித்தீர்ப்பு துறக்கம் நரகம் முதலியவை பற்றிய கொள்கைத் தொகுதி.
Escheat
n. இறையுரிமைப்பாடு, பறிமுதலான உடைமை அல்லது விருப்ப ஆவணமெழுதப்பெறாத மரபற்றவர் உடைமை அரசுக்கோ அரசுநிலைக் குடிவார முதல்வர்க்கோ இயல்பாகச் சென்றடைதல், இறையுரிமைப்பாட்டுக்கு உரிய உடைமை, பறிமுதல், (வினை) இறையுரிமைப்படுத்து, இறையுரிமைப்பட்ட உடைமைமயாகச்சென்று மீள்வுறு, பறிமுதல் செய்.
Eschew
v. தவிர், விட்டொழி, விலக்கு.
Eschscholtzia
n. பொதுவாக மஞ்சள் வண்ணமலர்களையுடைய செடிவகை.
Esclandre
n. (பிர.) அவதூறு, இகழ்ச்சியுரை, பழிப்புரை.
Escort
-1 n. வழிகாப்பாளர், வழித்துணைக்குழு, வழிகாப்புக்கப்பல், வழிகாவற் கப்பற்குழு, மெய்க்காவலர், மெய்க்காவல் உழையர், மெய்க்காவல், (பெ.) வழித்துணையான, மெய்க்காவலான.
Escort
-2 v. மெய்க்காவலாகச் செல், வழித்துணையாக உடன்செல், துணையாக உடன்செல்.
Escritoire
n. தாள் எழுதுகோல் முதலிய பொருள்களை வைக்க உதவும் இழுப்பு அறைகளுள்ள சாய்வான எழுது மேசை.
Escrow
n. சில நிபந்தனைகள் நிறைவேறும் வரை மூன்றாவது ஆளுடைய பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் எழுத்து மூலமான சட்ட ஒப்பந்தம்.
Escudo
n. 4 ஷில்லிங்கு 5 பென்ஸ் மதிப்புள்ள போர்ச்சுகீசிய நாணயம்.
Esculent
n. தீனி, உண்ணத்தக்கது, (பெ.) மனிதனால் உண்ணத்தக்க.
Escutcheon
n. கிடுகு, விருது தாங்கிய கேடயம், மரபுரிமைச்சின்னம்.
Eskar, esker
(மண்.) ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் அமைந்த பனிக்கட்டி வரம்பு.
Eskimo
n. வடதுருவம் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற 'எஸ்கிமோ' என்ற வகுப்பினர்.