English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Esoteric
a. சிலருக்கு மட்டும் கற்றுக்கொடுக்கக்கூடிய, மறைபொருளான.
Espagnolette
n. பிரஞ்சுநாட்டுப் பலகணித்தாழ்ப்பாள்.
Espalier
n. கொழுகொம்புப் பலகணி.
Esparto
n. தாள் செய்வதற்காக ஸ்பெயின் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புல்வகை, தாள் செய்யப்த பயன்படும் புல்வகை.
Especial
a. தனிச்சிறப்புள்ள, மேதகவுடைய, தனியொன்றிற்கான.
Esperanto
n. உலகப் பொதுச் செயற்கைமொழி.
Espial
n. ஒற்றுதல், வேவுபார்த்தல்.
Espionage
n. வேவுபார்த்தல், ஒற்றாடல்.
Esplanade
n. மதிற்கோட்டைக்கும் நகரத்துக்கும் இடையுள்ள அகலிடம்.
Espousal
n. மணவுறுதிசெய்தல், திருமணம், மேற்கொள்ளுதல்.
Espouse
v. திருமணம் செய்துகொள், மகட்கொடு, மணக்க உடன்படு, ஆதரவுகொடு.
Espressivo
adv. (இத்.) (இசை.) உணர்ச்சியுடன், மெய்ப்பாட்டுடன்.
Esprit
n. (பிர.) துடிதுடிப்பு, மதிநுட்பம், எழுச்சி.
Espy
v. உற்றுப்பார், கண்டுபிடி.
Esquire
n. திருவாளர் போன்ற அடைமொழி.
Essay
n. முயற்சி, கட்டுரை, (வினை) ஆய்வுநடத்து, சோதித்துப் பார்.
Essayist
n. கட்டுரையாளர், பரிசோதிப்பவர்.
Esse
n. உளதாந் தன்மை, இயல்பு.
Essence
n. சாறு, சாரம், உள்ளியல்பு, பிழிவு, உள்ள பொருள், தனிச்சிறப்புள்ள பொருள், இன்றியமையாத பொருள், நறுமணப்பொருள்.
Essences
சாரங்கள், நறுமணச் சாரங்கள்