English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Estranged
a. நட்புமுறிவுற்ற, மனவேறுபாடு கொண்ட.
Estuary
n. ஓதம் பொங்குமுகம், கழிமுகம்.
Esurient
a. பசித்துள்ள, பேராசையுள்ள.
Et cetera etceteras
n. pl. மினையானவைகள், சில்லறைப் பொருள்கள்.
Eta
n. கிரேக்க நெடுங்கணக்கின் ஏழாவது ஏழுத்து.
Etat-major
n. (பிர.) படைத்துறைப்பணியாளர், படைத்துறைப்பணியாளர் அலுவலகம்.
Etcetera, etcetera
முதலியவை, இன்னோரன்ன பிற.
Etch
v. உலோகத்திற் செதுக்கு வேலைசெய்.
Etching
n. செதுக்குருவக்கலை, செதுக்குருவம்.
Eternal
a. நிலைபேறுடைய, சாசுவதமான.
Eternalize, eternize
நிலைபெறச்செய், பொன்றாப்புகழுடையதாக்கு.
Eternity
n. நிலைபேறுடைமை, ஈறில்காலம், பேரூழி, துறக்க வாழ்வு.
Etesian
a. ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிலநடுக்கடலில் வடமேற்கிலிருந்து வீசுகிற, நிலநடுக்கடல் வடமேற்குப் பருவக்காற்றைச் சார்ந்த.
Ethane
n. (வேதி.) வௌதறிய நிறமாக எரிசுல்ர் வீசுகிற நீரில் கரையாத நிறவாடையற்ற நீர்க்கரியகச் சேர்மவகை.
Ether
n. முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வௌத, விசும்பு, இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள், மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.
Ethereal, etherial
புலன்கடந்த, நுண்பொருளான, கட்புலனாகாத, காற்று போன்ற, ஆவியான, நொய்தான, வானுலகத்தைச் சார்ந்த, உலகப்பொருள்களுக்கு அப்பாற்பட்ட, இயற்கைமீறிய நுண்ணியல் மேணித் தோற்ற நடையுடைய, தெய்வ ஆவி வடிவான, (வேதி.) மயக்க மருந்தாகப் பயன்படும் நீர்மவகை சார்ந்த, (இய.) மின்காந்த அலை ஊடுபொருள் சார்ந்த.
Etherize
v. மயக்க மருந்துவகை நீர்மமாக மாற்று, மருந்து நீர்மவகை பயன்படுத்தி மயக்கமூட்டு.
Ethic, ethical,a.
நன்னெறி சார்ந்த, நெறிமுறை பற்றிய, மருந்துச் சரக்குகளில் கட்டளை ஒழுங்கு மீறாத.
Ethics
n.pl. ஒழுக்கவியல், அறவியல் ஆய்வேடுட, நன்னெறிக் கோட்பாடுகளின் தொகுதி, மனிதப்பண்பாடு நடத்தைகள் பற்றி ஆராயும் மெய்விளக்கத்துறை, நடை ஒழுங்கு முறை முழுப்பரப்பாய்வியல்.