English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Eucalptus
n. தைலந்தரும் தேவதாரு மரவகை.
Eucharis
n. அடிப்பூண்டுடைய தென் அமெரிக்க மணிவடிவ வெண்மலர்ச் செடி வகை.
Eucharist
n. இயேசுநாதரின் இறுதி விருந்துச் சடங்கு, இறுதி விருந்தின் வழிபாட்டுத் திருவிளையில் பயன்படுத்தப்படும் அப்பத் தேறல்கள்.
Euchlorine
n. டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஔளிய மஞ்சள்-பச்சைக்கலவை நிற நிலக்கரி வளி.
Euchre
n. அமெரிக்கச் சீட்டாட்ட வகை, (வினை) அமெரிக்கச் சீட்டாட்ட வகையில் மூன்று பிடி பிடிக்காமல் தோல்வியுற்ற எதிர்ப்பாட்டக்காரரின் மீது கெலிப்பாதாயம் பெறு.
Euclid
n. எகிப்தைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா வில் கி.மு. 300-இல் இருந்த யூக்னிட் என்ற அறிஞரியற்றிய வடிவியல் சார்ந்த கருப்பொருள் நுல், யூக்ளிட் வடிவியல் கருப்பொருள் நுலின் ஓர் ஏட்டுப்படி, பொதுமுறை வடிவியல் நுல்.
Euclidean
a. கிரேக்க வடிவியலறிஞர் யூக்ளிட் என்பாருக்குரிய, யூக்ளிட் வகுத்துணர்ந்து கண்ட மூல மெய்ம்மைகளுக்கிசைவான இலக்கணமுடைய இடவௌத சார்ந்த.
Eudaimonism
n. நிறை இன்ப அமைதியை இலக்காகக் கொண்ட ஒழுக்க முறை அமைப்பு.
Eudiometer
n. இரும்பு மூடிவழி மின்பொறி உட்செலுத்தி உள்ளிருக்கும் வளிகளை இயைவிக்கும் வாய்ப்புடைய படியளவிட்ட கண்ணாடிக் குழாய் வகை.
Eugenic
a. மனிதவின மேம்பாட்டாராய்ச்சி சார்ந்த.
Eugenics
n. pl. இன ஆக்க மேம்பாட்டியல், இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத்துறை.
Euhemerism
n. புராணகதைகளுக்கு வரலாற்று அடிப்படையான விளக்கம் அளிக்கும் முறை, தெய்வங்களின் மக்கள் ஆர்வ வழிபாட்டுக்குரிய பெருமக்களே என்று கூறும் விளக்கம்.
Eulogize
v. புகழ்ந்து பேசு, புகழ்ந்து எழுது.
Eulogy
n. புகழ்ச்சி, புகழுரை.
Eumenides
n. pl. கிரேக்க பழங்கதை மரபுப்படி 'நற்றெய்வங்கள்', வெறித்தெய்வ அணங்குகளுக்குரிய மங்கல்ப்பெயர்.
Eunuch
n. அலி, முற்கால அரசவையில் அமர்த்தப்பட்ட விதையகற்றப்பட்ட ஆண் பணியாள்.
Euonymus
n. புதர்ச்செடி வகை.
Eupeptic
a. நல்ல உணவுச் செரிமான நிலை உள்ள.
Euphemism
n. மங்கல வழக்கு, தீயசொல்லை மறைத்துக்கூறும் மங்கலக் குறிப்பு, இடக்கரடக்கர் வழக்குச்சொல், முனைத்த கெட்ட திறங்களை மறைத்துச் சிறு கெடுபண்புகளாகக் கூறுதல்.
Euphony
n. இன்னோசை, செவிக்கினிமை, சொல் தொடர் ஆகிய வற்றின் வகையில் எளிய இன்னோசை நோக்கிய ஒலியியல் வேறுபாடு.