English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Evacuate
v. வெறுமையாக்கு, உள்ளடக்கப்பொருளை வௌதயே கொட்டு, குடியெழுப்பி வௌதயேற்று, இடர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்து, படைவகையில் பின்வாங்கிச் செல், வௌதயேறு, மலங்கழி.
Evacuation
n. வௌதயேற்றம், பின்வாங்குதல், வௌதயேற்றப்பட்ட பொருள்.
Evacuee
n. வௌதயேற்றப்பட்டவர், வீடிலி, ஊரிலி, நாடிவி.
Evade
v. தவிர், விலக்கு, சூழ்ச்சி செய்து தப்பிச்செல், அகப்படாமல் தப்பு, விடை கொடாமல் மழுப்பு, வாதத்திற்கு இடங்கொடமல் மேவிச்செல், பிடிகொடாமல் நழுவு, சட்டத்தை நயமாக மேவி ஏய்த்துவிடு, கடமையிலிருந்து ஒதுங்கிச்செல், தட்டிக்கழி.
Evaginate
v. (உட.) குழல்வடிவ உறுப்பு அப்ம்புறமாக மாற்றி வை.
Evaluate
v. கணி, தொகை மதிப்பீடு, கணக்கீடு, விலை மதிப்புக்கூறு.
Evanesce
v. பார்வையிலிருந்து மறை, காணாமற்போ, உருமறைவுறு, உருவரை தெரியாமற் போ.
Evanescent
a. விரைந்து மறைகிற, நிலையற்ற, அழியக்கூடிய, மிக நுண்ணிப்பியலான.
Evangel
n. விவிலிய நுலின் நான்கு கவிசேஷப்பகுதிகளில் ஒன்று, அரசியற் கொள்கை, கோட்பாடு.
Evangelic
n. விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர், (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த, விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரிய,நம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய.
Evangelism
n. விவிலிய 'நற்செய்தி'யைப் பற்றி மேடை உரையாற்றல்.
Evangelist
n. விவிலிய 'நற்செய்திகள்' எழுதிய நால்வரில் ஒருவர், 'நற்செய்திகளை'ப் பற்றி மேடையுரையாற்றுபவர், சமயத்திருப்பணி செய்யும் பொதுநிலை மக்களில் ஒருவர்.
Evangelistic
a. 'நற்செய்திகள்' எழுதிய நால்வர்களைச் சார்ந்த, விவிலிய நுல் மேடைப் பேச்சாளரைப் பற்றிய.
Evangelize
v. விவிலிய நுலைப்பற்றி உரையாற்று, கிறித்தவ சமயத்தைப் போதி.
Evanish
v. திடீரென மறைந்துபோ, சிறிதாக மறைவுறு, மாயமாய்ப்போ.
Evaporate
v. ஆவியாய் மாற்று, ஆவியாய் மாறு, ஈரம் புலர்வுறு, ஈர நயப்பு வௌதயிடு, மறைவுறு.
Evaporograph
n. அலைவிரிவியக்கமுடைய நெய்யாவிமீது நிழற்படிவம் படியவிடுவதன் மூலம் உருவௌத நிழலுருப்படுத்திக் காட்டும் கருவி.
Evasion
n. சூழ்ச்சிசெய்து தப்புதல், மழுப்புதல், மேவிச் செல்லுதல், கடமை தவிர்ப்பு, பிடிகொடாமை, தட்டிக்கழிப்பு, தட்டி ஏய்ப்பு, தட்டி ஏய்ப்பு முறை, போலிச் சாக்குப்போக்கு.
Eve
-1 n. விவிலிய மரபின்படி மனித இனப்படைப்பின் முதற்பெண், ஏவா'
Eve
-2 n. (செய்) மாலை, பெருநிகழ்ச்சியின் முன்னனை பொழுது.