English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Euphorbia
n. விறுவிறுப்பான பால் போன்ற சாறுள்ள புதர்ச்செடி வகை.
Euphoria, euphory
நன்னிலையுணர்வு, நன்னிலை உடையேம் என்ற மனநிறைவுநிலை.
Euphrasy
n. கண்கோளாறு நீக்க முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட செடி வகை.
Euphrosyne
n. கிரேக்க பழங்கதையில் கலைநயத் தெய்வ அணங்குகளில் ஒருவர்.
Euphuism
n. அணிகள் மட்டின்றிச் செறிவுற்ற போலிச் செயற்கை மொழிநடை.
Eurasian
n. பறங்கியர், ஐரோப்பிய-ஆசிய தாய் தந்தையரை உடையவர், (பெ.) ஐரோப்பிய-ஆசிய பிறப்புடைய, ஐரோப்பா-ஆசியா இரண்டையும் சார்ந்த.
Euratom
n. அமைதிமுறை சார்ந்த அணு ஆற்றலின் கூட்டுவள ஆக்கத்துக்காக 1ஹீ5க்ஷ்-இல் அமைந்த பிரான்சு-இத்தாலி-மேலை-செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளடங்கிய கூட்டுறவு.
Eureka
n. ஆராய்ச்சி வெற்றி எக்களிப்பு.
Eurhythmic
a. ஒத்திசைந்த, இசைவு பொருத்தமுடைய.
Eurhythmics
n. pl. உடலியக்க ஒத்திசைவமைதி, இசைமுறை உடலியக்க ஒத்திசைவமைதிப் பயிற்சி.
Euromarket, Euromart
பிரான்சு-இத்தாலி-மேலைச்செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் அடங்கிய 1ஹீ5ஹீ-இல் நிறுவப்பட்ட ஐரோப்பியப் பொது வாணிகக்களக் கூட்டுறவமைப்பு.
European
n. ஐரோப்பியர், (பெ.) ஐரோப்பாவைச் சார்ந்த, ஐரோப்பாவில் நிகழ்கின்ற, ஐரோப்பாவெங்கும் பரவியுள்ள.
Eurovision
n. அனைத்தை ரோபியத் தொலைக்காட்சிப் படர்வலையமைப்பு.
Eusol
n. வண்ணகக் காரத்திலிருந்து உருவாக்கப்படும் நுண்மக்கள் கொல்லும் நச்சுத்தடை மருந்து.
Eustachian
a. யுஸ்டேஷியல் என்ற இத்தாலிய உடற்கூற்று நுலறிஞரைச் சார்ந்த.
Eutectic, a.,
கூறுநிலையமைதியுடைய, கலவையில் ஒரே வெப்பநிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக்கலப்புக் கூறுகளையுடைய.
Euterpe
n. பண்டைக் கிரேக்கரின் இசைக்கலைத்தெய்வம், ஒற்றைத்தடிமர வகை.
Euterpean
a. பண்டைக் கிரேக்கரின் இசைக்கலைத்தெய்வம் சார்ந்த, ஒற்றைத்தடிமர வகை சார்ந்த.
Euthanasia
n. நல்ல சாக்காடு, நோவில்லாச் சாவு, குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து செயற்கை முறையில் சாவை வருவிக்கும் முறை.
Evacuant
n. பேதி மருந்து, (பெ.) பேதியாகச்செய்கிற.