English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ethiolpian
n. ஆப்பிரிக்காக் கண்டத்தில் எதியோபியா நாட்டவர், மனித இனநுலின் படி மனிதப்பேரினத்தின் இனங்களில் ஒன்று, கருநிற மனித இனம், (பெ.)எதியோபியா நாட்டைச் சேர்ந்த, கருமை நிறமுடைய.
Ethmoid
a. சல்லடை போன்ற, அரிதட்டுப்போன்ற.
Ethnarch
n. இன ஆட்சி முதல்வர், மாகாண ஆட்சியாளர்.
Ethnic, ethnical
இனத்துக்குரிய, மனித இனப்பிரிவு சார்ந்த, மனித இன ஆராய்ச்சிக்குரிய.
Ethnography
n. இனப்பரப்பு விளக்கவியல், மனித இனப்பரப்புப் பற்றிய விஞ்ஞான விளக்க ஆய்வியல்.
Ethnology
n. மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல், மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல், பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல்.
Ethology
n. மனிதப் பண்பாண்மை ஆக்கப்பற்றிய ஆய்வு நுல்.
Ethos
n. பண்பாண்மை, தனிப்பண்பமைதி, இயல்பான நடத்தை ஒழுங்கமைதி, ஒழுக்க உயர்நிலை இயல்பு, நாட்டுச் சிறப்புப்பண்பு, இனப்பண்பு, சமுதாயப் பொதுப்பண்பு, மக்கட்பண்பு, அமைப்புமுறைத் தனியியல்புக்கூறு.
Ethyl
n. (வேதி.) வெறிய முதலிய வற்றிலடங்கிய அடிப்படை நீர்க்கரியகப் பொருள்.
Etiolate
v. செடிவகையில் ஔதபடாமல் தடுத்துப் பசும்பகுதி வௌதறச் செய், ஆள்வகையில் வௌதறச்செய்து நோய்த்தோற்றம் உண்டுபண்ணு.
Etiquette
n. ஒழுங்காசாரம்ம, சமுதாய ஆசாரமுறை, அரசவை மென்னய ஒழுங்குமுறை, வினைமுறை நடையொழுங்கு, குழுநலக்கட்டுப்பாட்டொழுங்கு முறை, எழுதாக் கட்டு முறைச் சட்டதிட்ட முறை.
Etna
n. எரிவெறியத்தின் மூலம் சிறு அளவான நீர்மங்களைச் சூடாக்குவதற்குரிய கொளகல வகை.
Etnean
a. எட்ணா என்னும் எரிமலை சார்ந்த அல்லது போன்ற.
Eton
n. இங்கிலாந்தில் பழங்காலமுதல் இருந்து வருகிற பொதுப்பள்ளி இடம் பெற்றுள்ள பட்டணம்.
Etruscan
n. இத்தாலியிலிருந்த பண்டை எட்ரூரியவைச் சேர்ந்தவர், (பெ.) பண்டை எட்ரூரியா சார்ந்த.
Etude
n. (பிர.) சிற்றிசைப் பாடல், சிற்றிசைப் பயிற்சி.
Etui, etwee
ஊசிகள் வைக்கும் சிறுபெட்டி, பற்குச்சிகள் வைக்கும் சிறு பேழை.
Etymologize
v. அடிச்சொல் வரலாறு கொடு, சொல்லிலக் கணம் காட்டு, சொல் வரலாறு உய்த்தறிவி, சொல் வரலாறு பயின்றாராய்.
Etymology
n. சொல்லாக்க விளக்கம், அடிச்சொல்வரலாறு, மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை, சொல்லிக்கணம், சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.
Etymon
n. அடிப்படை மூலச்சொல், வேர்ச்சொல்.