English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Exoteric
a. வௌதயரங்கமான, கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க, மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத, மிகப்பொதுப்படையான, சாதாரணமான.
Exoterics
n. pl. எல்லாருக்கும் தெரிவிக்கப்படத்தக்க பொதுக்கொள்கை முறைகளின் தொகுதி, கோட்பாட்டு முறை.
Exotic
n. வேற்றுத் திணைச்செடி வகை, சூழலுக்கு ஒவ்வா அயல் வரவுப்பொருள், (பெ.) வேற்றுநாட்டிலிருந்து கொணரப்பட்ட, அயற்பண்புடைய, தாய்நிலத்துக்குப் புதிதான, திணைப்புறம்பான.
Expand
v. பரப்பு, பரவுறு, விரித்துரை, விளக்கு, விரிவுபடுத்தி எழுது, பருமையாக்கு, விரிவாக்கு, விரி, அகலமாகு, பெரிதாகு, பெருகு, விரிவடை, பருமை மிகு, உருவாகிவளர், பழகுநலம் உடையவராகு, தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி.
Expanse
n. விரிவு, அகல்பரப்பு, அகலிடம், அகல்வௌத, வானவௌத, பரப்பின் அளவு.
Expansible
a. விரிவாக்கப்படத்தக்க, விரிவுறக்கூடிய.
Expansile
a. விரியக்கூடிய.
Expansion
n. விரிவடைதல், விரிவடைந்தநிலை, விரிவு, பரப்பு, படர்ச்சி, பெருக்கம், விரிவாக்கப்பட்ட ஒன்று, வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம், விரிவாக்கப்பட்ட அளவு, ஆட்சிப்பரப்பின் விரிவு.
Expansionism
n. ஆட்சிஎல்லை விரிவுக்கொள்கை.
Expansionist
n. நாட்டின் ஆட்சிப்பரப்பினை விரிவாக்க வேண்டுமென்னும் கோட்பாடுடையவர்.
Expansive
a. நாலாபக்கமும் பரவுகிற, பெரிதும் விரிவாக்கப்பட்ட, விரிவான, அனைத்தையும் உள்ளடக்குகிற, விரிவப்ற்சியுறும் இயல்புடைய, வளரும் ஆற்றலுடைய, விரிவான, பரந்தகன்ற, ஆட்கள் வகையில் தாராளமாகப் பேசிப்பழகுகிற, உணர்ச்சிவகையில் கனிவு எழுச்சியுடைய, பேச்சுவகையில் சொல்வளமுடைய.
Expatiate
v. வளம்பட உரை, விரிவாக எழுது, கட்டறுச் சுற்றிச்செல்.
Expatiative, expatiatory
a. எல்லைகடந்து விரிந்து செல்கிற.
Expatriate
v. நாடுகடத்து, குடிபெயர்த்து வௌதயேற்று, குடிமை உரிமையைத்துற.
Expatriation
n. நாடுகடத்தல், நாட்டைவிட்டு வௌதயேற்றப்பெறல், தாயகத்துறப்பு.
Expect
v. எதிர்ப்பு, காத்திரு, வரவு நோக்கு, எதிர்நோக்கு, நாடகக் கூடுமெனக்கருது, இன்னபடி நடக்கவேண்டுமென நினை.
Expectance, expectancy
n. எதிர்நோக்கியுள்ள நிலை, கருதியிருக்கை, எதிர்கால வாய்ப்புவளம், எதிர்பார்க்கப்படுவது, அவாநம்பிக்கை.
Expectant
n. எதிர்நோக்கியிருப்பவர், பதவி முதலிய வற்றுக்கான வேண்மர், (பெ.) எதிர்நோக்குகிற, காத்திருக்கிற, உடைமைபெறும் வாய்ப்பு எதிர்நோக்கியுள்ள, பதவிவாய்ப்பு எதிர்நோக்குகிற.
Expectation
n. எதிர்நோக்கியிருத்தல், காத்திருத்தல், எதிர்பார்த்திருப்பதற்குரிய செய்தித, எதிர்பார்க்கத்தக்கது, எதிர்பார்க்கத்தக்க அளவு, எதிர்பார்க்கப்படுவதன் மதிப்பு.
Expectations
n. pl. மரபுவழி வந்துசேரத்தக்க உடைமை வாய்ப்புக்கள், எதிர்பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுதி, வருநிலை வாய்ப்பு வளங்கள், வருநிலை நேர்வுவளங்கள்.