English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Expectative
n. ஒழிவாகுமுன்பே முற்பட எதிர்நோக்கி வழங்கப்படும் மானியம், எதிர்பார்க்கப்படும் பொருள், (பெ.) எதிர்பார்க்கப்படுகிற, எதிர்பார்க்கப்படும் பொருள் சார்ந்த, மானிய வகையில் கொடுப்பவர்க்கே மீள்கிற, மானிய மீட்சி சார்ந்த.
Expecting
a. (பே-வ.) சூலுற்ற.
Expectorant
n. கபம் வௌதக்கொணரும் மருந்து, (பெ.) கபம் வௌதக்கொணர உதவுகிற.
Expectorate
v. கபம் வௌதயேற்று, இருமிக் கபத்தை வௌதக்கொணர்.
Expectoration
n. இருமிச் சளி வௌதப்படுத்துதல், கபம் உமிழ்வு.
Expedience, expedency
சூழலுக்கேற்ற தகுதி, வேளைக்கேற்ற பொருத்தமுடைமை, விரும்பத்தக்கநிலை, தனி நலவாய்ப்புடைமை.
Expedient
n. தகுமுறை, வழிதுறை, கருவி, (பெ.) தக்க, சூழ்நிலைக்கிசைந்த, உகந்த, விரும்பத்தகுந்த, நலமளிக்கிற.
Expedite
a. தடங்கலற்ற, விரைவான, உடனடியான, (வினை) தடைநீக்க, ஊக்கிவிடு, விரைவுபடுத்து, போக்கு, விரைந்தனுப்பு.
Expedition
n. விரைவு, படையெழுச்சி, தனிநோக்கத்துக்கு உட்பட்ட சுற்றுப்பயணம்.
Expeditionary
a. படையெழுச்சிசார்ந்த, படையெழுச்சியின் இயல்புடைய, சுற்றுப்பயணம் சார்ந்த, சுற்றுப்பயணத்தின் தன்மையுடைய.
Expeditious
a. செயல் விரைவுடைய, உடனடியாகச் செய்கிற, விரைவார்ந்த, விரைவாகச் செய்யப்பட்ட, முறுகிய, விரை செயலாற்றுவதற்குத்தக்க.
Expel
v. ஓட்டு, துரத்து, நீக்கு, அகற்று, புறந்தள்ளு, வௌதயேற்று, வீசியெறி, நாடுகடத்து.
Expend
v. செலவிடு, பயன்படுத்திக்கொள், செலவழி, பயன்படுத்தித்தீர், ஈடுபடுத்தி இழவி.
Expendable
a. செலவிடத்தக்க, குறிக்கோளுக்காக இழந்து விடத்தக்க.
Expenditure
n. செலவிடுதல், பயன்படுத்தித் தீர்த்தல், செவழிவு, செலவினம், செலவிடப்பட்ட தொகை.
Expense
n. செலவு, செலவழிவு, செலவழிந்த தொகை, கைச்செலவு, நடைமுறைச் செலவினம், கட்டணச் செலவு, ஆக்கவினைப் பொருளாக்கச் செலவினம், கைம்முதல் செலவு, முதலீடாகவேண்டிய தொகை.
Expenses
n.pl. குறிப்பிட்ட வேலைக்காகத் தேவைப்படும் கைப்பணம், செலவு செய்த தொகை, (சட்.) வழக்காடுதற்குப் பிடிக்கும் செலவு.
Expensive
a. மிகுவிலையுள்ள, பெருஞ்செலவு பிடிக்கிற, ஊதாரித்தனமான.
Experience
n. அனுபவம், நேருணர்வு, செயலீடுபாடு, அனுபவ அறிவு, நேர்க்காட்சியுணர்வு, பட்டறிவு, தேர்வறிவு, நுகர்வு, நீடுபல்காட்சியுணர்வு, வாழ்க்கைப்புறநிகழ்ச்சி, புறநிகழ்ச்சியின் அகநேர்ச்சி, உள்ளனுபவம், பொறியுணர்வு, புலனுணர்வு, அகக்காட்சியுணர்வு, தனி ஈடுபாட்டுணர்வு, (வினை) நுகர், துய்த்துணர், படு, தாங்கிக்கொள், புலனுணர்வுகொள், அகஉணர்வுகொள், புறநிகழ்வுணர், பட்டறி, தேர்ந்துணர், செயலீடுபாடுகொள், கண்கூடாயறி, நேர்காட்சியாலுணர், நேர்காண்.
Experienced
a. தேர்ந்த, பட்டறிந்துகொண்ட, தேர்ச்சித்திறமை வாய்ந்த.