English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Experiences
n. pl. சமய அகவுணர்வு நிலைகள்.
Experiential
a. பட்டறிவு சார்ந்த, அனுபவத்தினால் பெற்ற.
Experientialism
n. எல்லா அறிவும் புறக்காட்சியுணர்வினின்றே கிடைக்கிறதென்னும் கோட்பாடு.
Experiment
n. செய்முறை, தேர்முறை, தேர்வாய்வு, சோதனை, செயல்தேர்வு, முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி, (வினை) தேர்முறையாற்று, செய்முறையால் தேர்ந்து பார், சோதனை செய், செய்துபார், பலதடவை விழுந்தெழுந்து முயல்.
Experimental
a. அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட, இயற்றிப்பார்த்ததை அடிப்படையாகக் கொண்ட ஆய்நிலையான, சோதனைகளில் பயன்படுத்தப்படுகிற, ஊகம் மேற்கொண்டு செய்யப்படுகிற, செய்து செய்து பார்க்கும் நிலை உடைய.
Experimentalism
n. தேர்வாய்வுமுறை, தேர்வாய்வு மீது நம்பிக்கை.
Experimenter, experimentist
n. தேர்வாய்வு செய்பவர்.
Expert
-1 n. வல்லுநர், நிபுணர், ஒருதுறையில் தனித்திறமை பெற்றவர்.
Expert
-2 a. கைதேர்ந்த, பலமுறைசெய்து பழக்கமேறிய, திறமை வாய்ந்த.
Expertise
n. தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை.
Expiable
a. கழுவாய் செய்யத்தக்க, பரிகரிக்கத்தக்க.
Expiate
v. கழுவாய் செய், பரிகரி, ஈடுபண்ணு.
Expiation
n. கழுவாய் செய்தல், ஈடுசெய்யும் முறை, ஈடுதீர்வு, நிவர்த்திப்பு, பரிகாரம்.
Expiration
n. மூச்சு வௌதவிடுழ்ல், காலஞ்செல்லாதல், கால எல்லை கடப்பு, அவதிமுடிவு.
Expiratory
a. மூச்சு வௌதவிடுவது சார்ந்த, வௌத உயிர்ப்புக்குரிய.
Expire
v. மூச்சுவௌதயிடு, இற, அணைந்துபோ, முடிவுறு, காலஅவதியாகு, அவதிகடந்து செல்லாததாகிவிடு, மரபு அற்றுப்போ.
Expired
a. இறந்த, மரபற்றுப்போன, காலாவதியான, வழக்கற்றுப்போன.
Expiring
a. இறந்து கொண்டிருக்கிற, சாகும் காலத்துக்குரிய, சாகுந்தறுவாயில் சொல்லப்பட்ட.
Expiry
n. காலஅவதி, காலஎல்லைகடப்பு, காலக்கழிவு, முடிவு.
Expiscate
v. நுழைந்தாய்வு செய்து கண்டுபிடி, தீர்ந்த தேர்வினால் கண்டுணர்.