English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fateful
a. ஊழ் செறிந்த, விதிவசமான, கேடு குறித்த, பெரு நிகழ்ச்சிக்குரிய, காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க, முக்கியன்ன, ஊழால் இயக்கப்படுகிற, ஊழாற்றல் காட்டுகிற.
Fat-head
n. அறிவு மந்தமானவர்.
Fat-hen
n. தடித்த இலையுள்ள செடிவகை.
Father
n. தந்தை, மூதாதை, முன்னோள், ஊங்கணோர், முதுகணாளர், பாதுகாவலர், தோற்றுவித்தவர், மூலமுதல்வர், முதல் முதல் திட்டமிட்டவர், முதல் தலைவர், தொடக்ககாலத் தலைவர், ஏடு ஆக்கியோன், மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர், பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன், கடவுள், கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு, கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர், பாவமன்னிப்புச் செய்பவர், சமயகுரு, மடத்துத்தலைவர், போப்பாண்டவர், சமய மாவட்ட முதல்வர், ஆட்சிக் குழுவினர், நகரவை மூப்பர், மன்ற மூப்பர், சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர், மூலமுதல் கருத்து, மூல முதற்படிவம், (வினை) மகவாகப் பெற்றெடு, தந்தையாக விளங்க, தந்தைமை ஒப்புக்கொள், தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு, தோற்றவி, ஏட்டினை ஆக்கு, ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள், ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு, தந்தைபோலிருந்து அன்பாட்சி செய், குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய், ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Father-figure
n. மூப்பனுபவமும் மேலாண்மையுமுடைய நம்பிக்கைக்குரிய தலைவர்.
Father-in-law
n. மாமனார், மனைவியின் தந்தை, கணவனின் தந்தை.
Fatherland
n. தந்தையர்நாடு, தாய்நாடு, பிறந்த நாடு, செர்மனிநாடு.
Fatherless
a. தந்தையற்ற, ஆக்கியோன் அறியப்பெறாத.
Fatherly
a. தந்தையொத்த, தந்தைக்குரிய.
Fathom
n. இருகைப் பாவு அகலம், நான்குமுழம், ஆறு அடியளவு, ஆறு அடி சமசதுரக் குறுக்குமுகமுடைய நீள்தடி, எட்டும் அளவு, பிடி அளவு, உள்ளத்தின் அறிவாழம், அறிவுத்திற அளவு.
Fatidical
a. வருவதுணர்த்தும் ஆற்றல் வாய்ந்த.
Fatigue
n. களைப்பு, சோர்வு, அயர்ச்சி, திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு, களைப்படையச் செய்யும் வேலை, படைவீரரின் போர்சாரா வேலை, போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி, (வினை) களைப்படையச் செய், சோர்வுறச் செய்.
Fatling
n. கொழுங்கன்று, இறைச்சிக்காகக் கொழுக்க வைத்த இளங்கன்று.
Fatten
v. கொழுக்க வளர், இறைக்சிக்காகக் கொழுக்க வை, செழிப்புடையதாக்கு.
Fatty
n. சதைப்பற்றுள்ள குழந்தை, குண்டான குழந்தை, (பெ.) கொழுப்புப்போன்ற, கொழுப்புள்ள, பிசுக்குள்ள, நோய் காரணமாக உடல்பெருத்த.
Fatuous
a. மடத்தனமான, பயனற்ற.
Faubourg
n. புறநகர்ப்பகுதி, புறஞ்சேரி, பாரிஸ்நகர்ப்புறப் பகுதி.
Faucal
n. (ஒலி.) ஆழ்மிடற்றொலி, (பெ.) மிடற்றிற்குரிய, மிடற்றொலி சார்ந்த.
Fauces
n. pl. (ல.) (உள்.) வாயின் பின்பக்கப் புழை.