English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Far-reaching
a. பரந்த செயல்விளைவுடைய.
Farrier
n. குதிரைக்கு இலாடமடிப்பவர், குதிரை மருத்துவர், குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
Farrow
n. ஓரீற்றுப் பன்றிக்குட்டிகள், (வினை) பன்றிக்குட்டிகளை ஈனு, குட்டியிடு.
Far-seeing, far-sighted
a. வருவதுணர்கிற, வருங்காலக்கூர் நோக்குடைய.
Fart
n. வாயு பறிதல், (வினை) வாயுபறியவிடு.
Farther
a. மிகுதொலைவிலுள்ள, மிகுதூரம் கடந்த, (வினையடை) மிகுதொலைவில், நெடுந்தூரம் கடந்து, முந்தி முனைப்பாக.
Farthest
a. ஏற்றுயர் தொலைவிலுள்ள, உச்ச உயர் அளவான, மீயுயர்படியான, (வினையடை) ஏற்றுயர் தொலைவில், உச்ச உயர்தொலைவிடத்துக்கு, மீயுயர்படியில்.
Farthing
n. ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு.
Farthingale
n. குடைப்பாவாடை, முன்னாட்களில் பாவாடையைக் குடைபோல விரித்து நிறுத்துவதற்குரிய திமிங்கில முள்.
Fary
-2 v. தேய்த்து இறும்படி செய், முனையில் அல்லது விளிம்பிலுள்ள முறுக்கின் புரியவிழ், தேய்வினால் இற்றுப்போ, முளைத்துவரும் கொம்புகளின்மேலுள்ள மென்பட்டுப் போன்ற பரப்பைத் தேய்த்தகற்றறு.
Fasces
n. pl. பண்டை ரோமபுரியில் உயர்நடுவர்முன் கொண்ட செல்லப்பட்ட கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச்சின்னம், மேலாண்மை உரிமையின் விருதுச் சின்னம்.
Fascia
n. மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பப்பகுதி, (உள்.) தசைநார் சூழ்தசைப்பட்டை, பட்டிகை, கச்சை, நாடா, உந்துவண்டியில் கருவித்தட்டி.
Fascia-board
n. உந்துவண்டியில் கருவித்தட்டி.
Fasciated
a. (தாவ.) நெருக்கமாக அழுத்தப்பட்டுள்ள ஒன்றாக வளர்ந்துள்ள, வரியுடைய, கோடுகளைக் கொண்ட.
Fascicle, fascicule, fasciculus
(தாவ.) கொத்து, திரள்.
Fasciculation
n. தவணைகளாக வௌதயிடப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி.
Fascinate
v. கவர்ச்சியுட்படுத்து, ஈர்த்துப்பற்று, தப்பமுடியாமல் பார்வையாலே ஈர்த்துப்பிடி.
Faseism, Fascismo
பொதுவுடைமை எதிர்ப்புக்கட்சி, இத்தாலிய வல்லாண்மைக்கட்சி, நாட்டுரிமைச் சமதர்மக்கட்சி, ஆட்சி வல்லாண்மை முறைமை.
Fashion
n. வடிவமைதி முறை, அமைப்புமுறை, படிவம், பாணி, காலவண்ணம், நாண்மரபு வழக்கு, நடப்பு வழக்கு, புறத்தோற்றம், பண்பாளர் குழாம், உயர்சமுதாயம், (வினை) உருவாக்கு, புனை, வனை, படிவமாக அமை, இசையஅமைத்துக்கொள்.