English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fashionable
n. காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர், புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர், (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய, காலநடைமுறைக்கேற்ற, புதுத்தினுசான, நவநாகரிகமான, நடப்பிலுள்ள, எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற, புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Fashion-plate
n. உடையில் நாண்மரபுத் தினுசுகளைக் காட்டுஞ் சித்திரம், பகட்டழகாக உடையுடுத்துபவர்.
Fast
-1 n. நோன்பு, உணவுமறுப்பு, உண்ணாநிலை, நோன்புப்பருவம், நோன்புநாள், உணவு உண்ணாமை, (வினை) நோன்பிரு, உணவு மறு, குறிப்பிட்ட உணவுப்பகுதி விலக்கு, சமயவினை காரணமாக நோன்பாற்று, துயரங்கொண்டாடும் முறையில் உணவு நீக்கியிரு, உணவின்றியிரு, பட்டினிகிட.
Fast
-2 a. உறுதியான, திடமான, நட்பு வகையில் நெருக்கம் வாய்ந்த, வேரூன்றிய, வலிமைவாய்ந்த, அரண்செய்யப்பட்ட, இறுக்கமான, அசையாத, ஊன்றிய, நிலையான, மாறாத, வண்ண வகையில் கெட்டியான, உறுதியாகப்பற்றுகிற, அழியாத, தூக்கவகையில் ஆழ்ந்த, எளிதிற் கலையாத, நெருக்கமான, அணித்தான, வ
Fast food
விரைவுணா (உணவு), உடனடி உணவு, விரைவு உணவகம்
Fasten
v. இறுக்கு, கெட்டியாக்கு, கட்டு, பொருத்து, இணைவி, தாழிடு, பூட்டு, கொளுவிமாட்டு, ஊன்று, பதியவை, கூர்ந்து நோக்கு, கட்ட வை, மேற்கொள், தெரிந்தெடு, பற்று, பிடி, இறுகு, பொருந்து, தாக்குதல் தொடங்கு.
Fastening
n. கட்டுதல், இறுக்குதல், கட்டுவது, இறுக்கவது, ஊன்றி நோக்குதல், ஊன்றிய பார்வை, சாட்டுப்பெயர், சாட்டுப்பெயர் இணைப்பு.
Fast-handed
a. கஞ்சத்தனமான.
Fasti
n. pl. (ல.) காலவரிசைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிப்பதிவேடு, வரலாற்றுப் பதிவேடு.
Fastidious
a. நுணுக்க நயம் எதிர்பார்க்கிற, எளிதில் மனநிறைவு செய்ய முடியாத, கூர்நனிச் சுவையுடைய.
Fastigiate
a. (தாவ.) குவிந்து செல்லும் வடிவுடைய.
Fastness
-1 n. கோட்டைட, அரண்காப்பு, உறுதி.
Fat
n. கொழுப்பு, நிணம், விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு, தாவர நெய், விலங்குயிர்களின் கொழுப்பு நெய், கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள், பொருளின் செழும்பகுதி, ஆதாயம் தரும்தொழிற்பகுதி, நடிகர் திறமையை வௌதப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி, (பெ.) கொழுத்த, இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, அச்சுரு வகையில் திண்ணிய, கொழுக்க வைக்கப்பட்ட, தின்று கொழுத்த, உருட்சி திரட்சியுடைய, பெருத்த, தடித்த, நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற, அறிவுமந்தமான, சுறுசுறுப்பான, முழுநிறைவான, மக்கான, (வினை) கொழுக்கவை, கொழுப்புடையதாகு, பெருக்கமுறு.
Fata morgana
n. (இத்.) மெசினா கடல் இடைக்கழியில் தோன்றும் கானல்.
Fatal
a. சாவுக்குரிய, உயிர்போக்கிவிடத்தக்க, சாவு தருகிற, அழிவார்ந்த, இறுதிக்கட்டமான, காலக்கேடான, இடரார்ந்த, கேடார்ந்த, ஊக்ஷ்ல் வகுக்கப்பட்ட, முடிவான, விதிவசமான, ஊழ்முடிவை முன்னறிவிக்கிற, ஊழ்போன்ற, தவிர்க்கமுடியாத, முக்கியமான.
Fatalism
n. ஊழ் வலிக் கோட்பாடு, விதிவசம் என்ற நம்பிக்கை, விடடவழி என்றிருக்கும் மனப்பான்மை, மாறாஊழ்வகுப்பு நம்பிக்கை காரணமான முயற்சியற்ற தன்மை.
Fatality
n. ஊழ் நியதி, விதியின் கட்டளை, விலக்க முடியாநிகழ்வு, விதிவசமான முடிவு, இடும்பை, இயல்பான இடர்நேர்ச்சி, உயிரிழப்பு, இயற்சாவு நேர்வு.
Fatalize
v. ஊழ்வகுப்புக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளு, ஊழின் ஆட்சிக்கு உட்படுத்து.
Fate
n. ஊழாற்றல், விதி, நேர்வு நிகழ்வுகளனைத்தின் எல்லையில் வகுப்பமைப்பு, கிரேக்க ஊழணங்குகள் மூவருள் ஒருவர், விலக்கமுடியா நேர்வு, வகுத்த வகுப்பளவு, அமைத்த அமைப்பு, வரையறுக்கப்பட்ட கால எல்லை, கால இறுதி, வாழ்க்கை முடிவு, சாவு, அழிவு, இறுதி விளைவு, கேடுகாலம், நடக்க இருப்பது, நிகழ வேண்டியது, (வினை) ஊழாக வகுத்தமை.