English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Far-away
a. காலத்தால் மிகளம் முந்திய, தன்னை மறந்த, மனக்கோட்டையில் ஆழ்ந்த.
Farce
n. கேலிக்கூத்து, நகைச்சுவை நாடகம், பயனில் நிகழ்ச்சி, ஏமாற்றுவினை.
Farceur
n. (பிர.) மறைபுதிர்வாளர்.
Farcy
n. குதிரைத் தொற்றுநோய் வகை.
Fare
n. பயணச்செலவு, வாடகை வண்டியில் பயணம் செய்பவர், உணவு, (வினை) பயணஞ்செய், நடைபெறு, நிகழ், காலங்கழி, நாள்தள்ளு, உணவுகொள்.
Farewell
n. வழியனுப்பு, பிரியாவிடை, பிரிந்துசெல்லு நேர நல்வாழ்த்து.
Far-famed
a. திசையெங்கும் இசையுடைய, புகழ்மண்டிய.
Far-fetched
a. வலிந்து பெறப்பட்ட.
Farina
n. கூலமாவு, மாச் சத்துள்ள வேர்த்தூள், மாவியல் கொட்டையின் தூள், தூள்படிவப்பொருள், (தாவ.) பூந்தாது, (வேதி.) மாச்சத்து.
Farinose
a. மாப்போன்ற, மாவு தூவப்பெற்ற.
Farm
n. பண்ணை, தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு, விளைநிலம் மேய்ச்சல், குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம், விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை, குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம், வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம், குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை, செயல்தீர்வகம், பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம், (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு, வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு, ஆள்வேலையை வாடகைக்கு விடு, குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை, உழு, பயிரிடு, நிலத்தைப் பண்படுத்து, வேளாண்மை செய்.
Farmer
n. உழவர், பண்ணைக் குடியானவர், வரி வாடகைக் கட்டணக் குத்தகை உரிமைக்காரர்.
Farmery
n. பண்ணைக்கட்டிடங்கள்.
Farm-house
n. பண்ணைவீடு, விளைநிலத்திற் கருகாமையிலுள்ள கொல்லை வீடு.
Farmplace, farmstead, farmsteading
கட்டிடங்களுடன் இணைந்த பண்ணை வீடு.
Faro
n. சூதாட்டச் சீட்டு விளையாட்டு.
Farouche
a. (பிர.) நாணமுள்ள, சிடுசிடுத்த.