English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
File
-2 n. கோப்பு, இணைத்தொகுப்பு, பதிவுமூலங்களைக் கோத்திணைத்துப் பேணுவதற்கான திண்கம்பி, வேண்டும் போது எளிதாகப் பார்ப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட தகவல்தாள் சேகரம், சட்டப்பதிவுத் தொகுதி, பத்திரிகை வரிசைத் தொகுப்பு, பெயர்வரிசை, பட்டியல், (வினை) கோத்திணை, தகவல் தா
File
-3 n. படையின் முகப்பு வீரனுக்குப் பின்னுள்ள ஒற்றை அணிவரிசை, ஒருவர்பின் ஒருவரான ஒற்றை ஆள்வரிசை, சதுரங்கப் பலகையில் இடைநீளத்திலுள்ள ஒற்றைக்கட்ட வரிசை, (வினை) அணிவரிசையாகச் செல், அணிவரிசையில் செல்லும் படி கட்டளையிடு.
Filemot
n. சருகிலை நிறம், (பெ.) சருகிலை நிறமுள்ள, தவிட்டு நிறத்தோடு கூடிய மஞ்சள் நிறமுள்ள.
Filet
n. சதுரக் கண்ணுள்ள வலை வகை.
Filial
a. மகவுரிமை சார்ந்த, மகன் அல்லது மகளுக்குரிய, புதல்வர் புதல்வியரிடமிருந்து எதிர்பார்க்கத்தக்க.
Filiation
n. மகவுத் தொடர்பு, நேர்மரபுவழி உறவு, கிளை விரித்தல், மொழி இனக் கிளைத் தோற்றம், மக்கள் இனக்கிளை வழித் தோற்றம், மரபுக் கொடித் தொடர்பு, மரபுக்கொடி ஒழுங்கு.
Filibuster
n. அயல்நாட்டோ டு தன்நாட்டுச் சட்ட உரிமை யில்லாமலே சண்டையில் ஈடுபடுபவர், நாடுகடந்து கொள்ளையிடும் படைவீரர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டை யிடுபவர், (வினை) அயல்நாட்டுடன் நாட்டுரிமையில்லாமலே போரில் ஈடுபடு, சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடு.
Filibusterer
n. அயல்நாட்டோ டு சட்டப்படி உரிமையற்ற சண்டையில் ஈடுபடுபவர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடுபவர்.
Filigree
n. சரிகைச் சித்திரவேலை, கசவுப்பூவேலை, நொய்ம்மையான மினுக்க வேலைப்பாடு.
Filings
n. அராவல் தூள், துண்டுத்துணுக்குப் பொடித்திரள்.
Filings
n. உணவு குடிவகையில் நிறையளவு, மன நிறை வளிக்கும் அளவு, வள நிறைவு, ஏராளம், ஒருதடவை செறிநிறை அளவு, (வினை) நிரப்பு, நிரம்பு, திணித்து இடத்தை அடை, விட்ட இடத்தை இட்டு நிரப்பு, பூர்த்தி செய், குறை நிரப்பு, பள்ளம் நிரப்பு, குளங்குட்டைகளைத் தூர்த்துவிடு, நிறைத்து இடங்கொள், இடம் நிரம்பியிரு, இடங்கொளப் பரப்பு, பரவி இடங்கொள், விரிவுறு, திரண்டு வளர், நிறை வளர்ச்சியுறு, நிறையச் சேமித்து வை, நிறைவூட்டு, தெவிட்டுதலுறு, மன நிறைவுபடுத்து, பதவிநிரப்பு, பதவியில் இடம் பெற்றமர்ந்திரு, கடமை நிறைவேற்று, கட்டளை நிறைவேற்று, ஓய்வு வேளையைப் பயன்படுத்தி நிறைவு செய், பருத்தித் துணிகளில் இடைப்பிறி திட்டு நிரப்பிக் கலப்படம் செய்.
Fille de chambre
n. (பிர.) மனைப்பணிப்பெண்.
Fille de joie
n. (பிர.) பொதுமகள், விலைமகள்.
Fillet
n. தலைப்பட்டி, மயிர்க்கொடி, தலைமுடிகட்டும் இழைக்கச்சை, நாடா, கட்டு, பட்டை, மேடான இடை விளிம்பு, ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு, மெல்லிய நாடாப்போன்ற பொருள், விலா இறைச்சித் துண்டு, இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு, எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை, மாட்டிறைச்சிச் சுருளை, மீனிறைச்சிச் சுருனை, கொழுமீன் கண்டம், (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு, (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட, (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு, இழைக்கச்சை கட்டி அணிசெய், தலைப்பட்டியால் ஒப்பனைசெய், இழைக்கச்சையால் கட்டு, மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Filling
n. நிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று, வழங்குதல்.
Fillip
n. சொடக்கு, விரல் நொடிப்பு, சுண்டியடித்த அடி, சுண்டுகை, சிட்டிகையளவு, சிறுதுணுக்கு, தூண்டுதல், (வினை) சுண்டி அடி, விரல்களால் தெறித்து எறி, தூண்டுதல் கொடு, கிளறி ஊக்குவி, சொடக்கிவிடு, விரல் நொடி.