English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fillister
n. பலகணிக்கண்ணாடியின் சறுக்குச்சட்டம்.
Filly
n. பெண் குதிரைக்குட்டி, துடுக்கான இனஞ்சிறுமி.
Film
n. மென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு.
Film-fan
n. திரைப்பட ஆர்வலர்.
Filmy
a. மென்புரைபோன்ற, மென்புரையாலான, மென்புரை முடிய, வலைபோன்ற, மங்கலான, ஔதமறைக்கிற.
Filoselle
n. கழிவுப்பட்டு,
Filter
n. வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வௌதப்படு.
Filter cigarette
வடிமுனை வெண்சுருட்டு
Filter-bed
n. வடிகட்டு தளம், மிகுதியாக நீர் வடிகட்டுதற்கான மணற்படகை.
Filter-paper
n. வடிகட்டுதாள்.
Filth
n. அருவருப்பான அழுக்கு, மாசு, கழிவுப்பொருள், குப்பை, அழுக்குடைமை, தீட்டுடையது, தகாத நடை, இழி ஒழுக்கம், கீழ்மக்கள் மொழி, கொச்சை மொழி.
Filtrate
n. வடிகட்டிய நீர்மம், (வினை) வடிகட்டு, ஊறிச்செல்.
Filtration
n. வடிகட்டுதல், வடிகட்டுமுறை.
Fimbriate, fimbriated
a. (தாவ., வில.) விளிம்பில் மயிரிழையுடைய.
Fin
n. துடுப்பு, மீனின் உகைப்பியக்க உறுப்பு, துடுப்புப்போன்ற உறுப்பு, வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு, நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
Fin de siecle
a. (பிர.) பத்தொன்பதாம் நுற்றாண்டு இறுதியின் தனிப்பட்ட இயல்புடைய, முன்னேற்றமான, தற்காலத்திற்குரிய, புதுமையான, சரிகிற.
Final
n. இறுதி ஆட்டம், வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு, சொல்லின் இறுதி எழுத்து,.இறுதி ஒலிக்குறி, இசையில் பண்ணின் முக்கிய சுரம், கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு, (பெ.) இறுதியான, கடைசியான, முடிவான, ஐயத்திற்கு இடமற்ற, அறுதியான, மாற்றமுடியாத, நோக்கம் சார்ந்த, முடிவுடன் தொடர்புடைய.
Finale
n. நாடக இறுதி, கடைக்காப்பு, இசைநிகழ்வின் முடிப்பு, மங்களம், முத்தாய்ப்பு, இறுதி மகுடம்.